Run Serial News : சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு பேனாவில் கை எழுத்து போட்டு கொடுப்பார். கொஞ்ச நேரத்தில் அந்த கை எழுத்து அழிஞ்சு போயிரும். அப்படிப்பட்ட மை கொண்ட பேனா அது. அதை இன்னும் உலவ விட்டுக்கொண்டு, மண்டையில மசாலா இல்லன்னு காமிச்சுக்கிட்டு இருக்காங்க டிவி சீரியல் எடுப்பவங்க. சக்தி போலீஸ் வேலைக்கு செலக்ட் ஆக எக்ஸாம் எழுத போறான். அவனுக்கு ஆசை ஆசையா காதலி திவ்யா ஒரு பேனா குடுத்து அனுப்பறா. அந்த பேனாவில் தான் நீ எக்ஸாம் எழுதணும் சக்தின்னு சொல்லி.
அந்த பேனாவை ரொம்ப கேர்லெஸா வச்சு இருக்கானாம் சக்தி. விக்ரமும் ருத்ரனும் ஆளை அனுப்பி குறுக்கே புகுந்து பேனாவை மாத்திடறாங்க. எத்தனை இடைஞ்சல்கள் தராங்க. அத்தனையையும் அனுபவிச்சாலும் புத்தி வராம மறுபடி மறுபடி மாட்டிக்கறதே வழக்கமா போச்சு. சக்தி அந்த பேனாவை வச்சு ரொம்ப முனைப்பா எக்ஸாம் எழுதிக்கிட்டு இருக்கான். போதாக்குறைக்கு சக்திக்கு ஆகாத போலீஸ் ஜன்னலில் பார்த்து எழுது எழுதுன்னு நக்கல் வேற பண்றார். ரன் சீரியல் ஆரம்பத்தில் போதை பொருள் கடத்தல், ஹாஸ்பிடலில் வைத்து போதை பொருளை கடத்தியது என்று ஒரே திகில் மர்மம் என்று சென்று கொண்டு இருந்தது.
Advertisment
Advertisements
ஆஸ்பிடலில் எப்படி போதை பொருளை வைத்து சாமர்த்தியமாக கடத்தினார்கள் என்பதை விஷுவலாக கூட காண்பிக்கவில்லை. திகில், மர்மம் சப்புன்னு ஆகிப் போன மாதிரி கதையையே திசை திருப்பி ரொம்ப சாதாரண கதையாக ரன் சீரியல் இப்போது பயணித்துக்கொண்டு இருக்கிறது. நடிகர் கிருஷ்ணா அவரது மனைவி சாயா சிங் இருவரும் ஜோடி சேர்ந்து நடிக்கும் முதல் சீரியல். இந்த நோக்கத்தில் இந்த சீரியலை ப்ரொமோட் செய்து வருகிறது சன் டிவி. ஆனால், கதையில் பெரிதாக ஒன்றும் இல்லை என்பதால் எடுபடவில்லை என்றுதான் வேண்டும்.
தெய்வமகள் சீரியலில் பிரகாஷ் கேரக்டர் எப்போதும் முன்கோபியாக இருப்பது போலவே, கிருஷ்ணாவை ரன் சீரியலிலும் சக்தியாக காண்பித்து இருப்பது போராக இருக்கிறது. தெய்வமகள் சீசன் 2 என்று நினைத்துவிட்டார் போலும்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"