Thirumanam Serial: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘திருமணம்’ சீரியலில் முன்னணி கதாபாத்திரங்களாக நடிக்கும் சந்தோஷ் - ஜனனிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
சந்தோஷின் தம்பி நவீனும், ஜனனியின் தங்கை அனிதாவும் காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்கள். அனிதா வீட்டில் இதனை ஏற்றுக் கொள்ளாத நிலையில், சந்தோஷே முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்தான். பின்னர் அந்த திருமணத்தை இரு வீட்டாரும் ஏற்றுக் கொண்டார்கள். தான் சொன்னதையும் மீறி, தங்கை அனிதா நவீனை திருமணம் செய்துக் கொண்டதால் ஆரம்பத்தில் சற்று கோபமாக இருந்தாள் ஜனனி. இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்ட மாயா, ஜனனியை பற்றி இல்லாததையும் பொல்லாததையும் அனிதாவிடம் கூறி உசுப்பேத்தினாள். இதற்கிடையே கொரோனா தொற்றால், சீரியல் படபிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் தற்போது 3 மாதங்கள் கழித்து கட்டுப்பாடுகளுடன் சீரியல் படபிடிப்புகள் தொடங்கியுள்ளன. ஆகையால் புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
Advertisment
Advertisements
அண்ணன் வீட்டுக்கு வந்திருக்கும் அனிதாவும், ஜனனியும் அண்ணி, அப்பாவுடன் சேர்ந்து ஸ்நாக்ஸ் சாப்பிடுகிறார்கள். மதியம் சாப்பிட்டு சென்ற, சந்தோஷ் மீண்டும் வீட்டுக்கு வருகிறான். அவனுக்கு தட்டில் 2 லட்டும், மிக்ஸரும் வைத்து தந்து விட்டு, டீ போட செல்கிறார்கள் அண்ணியும், அனிதாவும். போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஜனனியின் அண்ணன் வினோத் ஃபோன் செய்ய, நான் வீட்ல தான் இருக்கேன் மச்சான் என்கிறான் சந்தோஷ். ஐயோ மாப்ள நான் வாங்கன்னு சொன்னது, போலீஸ் ஸ்டேஷனுக்கு என்கிறார். வினோத் வர சொன்னதை, வீட்டிற்குக் கூப்பிடுகிறார் என புரிந்துக் கொண்டு ஜனனியின் வீட்டிற்கு வருகிறான் சந்தோஷ். ஜனனியைப் பார்க்க தான் சந்தோஷ் அடிக்கடி வீட்டுக்கு வருகிறான் எனப் புரிந்துக் கொள்கிறார் ஜனனியின் அண்ணி வாணி.
பின்னர் வீட்டிற்கு வரும் சந்தோஷிடம் ஒரு கிளைண்டிடம் போய் செக் வாங்கிக் கொண்டு வர சொல்கிறார் அவனது அப்பா. அந்த கிளைண்ட்டும் ஜனனியின் தெருவைச் சேர்ந்தவர். காரில் பயணிக்கும் சந்தோஷ், ‘என்னடா சுத்தி சுத்தி ஜனனி வீட்டுக் கிட்டயே போற மாதிரி இருக்கு’ என தனக்குத் தானே பேசிக் கொள்கிறான். கூகுள் மேப்பும் ஜனனி வீட்டை காட்டுகிறது. உன்னை விட்டுட்டு மாப்ளையால இருக்க முடில போல என தொடர்ந்து ஜனனியை கிண்டல் செய்கிறார் அண்ணி.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”