‘கொரோனாவால் என் சகோதரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம்

“ஷமிதாப் படத்தில் நடித்ததில் இருந்து எனக்கு மேக்கப் கலைஞராக இருந்த என் சகோதரர் சச்சின் தாதா கோவிட் பாதிப்பால் இறந்துவிட்டார்.”

Akshara Haasan's Makeup Artist Dies due to Coronavirus
சோகத்தில் அக்‌ஷரா ஹாசன்.

நடிகர் கமல் ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசனுக்கு சினிமாவில் நடிப்பதை விட, டெக்னீஷியனாக பணிபுரிவதில் ஆர்வம் அதிகம். இருப்பினும் இயக்குநர் ஆர். பால்கி இயக்கிய ‘ஷமிதாப்’ படத்தின் மூலம் நடிகையாக அரிமுகமானார். இதில் அமிதாப் பச்சன், தனுஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அதன் பின்னர் இயக்குநர் சிவாவின் ’விவேகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் அக்‌ஷரா.

ரூ10,000 விலையில் பெஸ்ட் மொபைல் எது? இதோ பட்டியல்

அதன் பின்னர், கமலின் உதவியாளர் ராஜேஷ் இயக்கி, கமல் தயாரித்து விக்ரம் நடித்த ’கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்தார். தற்போது, ’மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிக்கும் ’அக்னிச் சிறகுகள்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் அக்‌ஷரா ஹாஸன்.

தற்போது அக்‌ஷராவின் ஆஸ்தான மேக்கப் கலைஞர் சச்சின் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். இதனால் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ள அக்‌ஷரா,

”இந்த பேண்டமிக்கின் போது பல அழகிய உயிர்களை இழந்தது என் இதயத்தை கனக்க வைக்கிறது. ஷமிதாப் படத்தில் நடித்ததில் இருந்து எனக்கு மேக்கப் கலைஞராக இருந்த என் சகோதரர் சச்சின் தாதா கோவிட் பாதிப்பால் இறந்துவிட்டார். அதனால் இந்த போஸ்ட்டை மிகவும் கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்.

Tamil Nadu 11th Result Live: இன்னும் சில நிமிடங்களில் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

அவர் ரொம்பவும் சந்தோஷமான, பாசிட்டிவான ஆள், மிகவும் திறமையானவர். அதை எல்லாம் தாண்டி அவர் எனக்கு நல்ல நண்பர். இரண்டு மகன்களுக்கு நல்ல அப்பா, மனைவிக்கு அருமையான கணவர். அவரின் குடும்பத்தார் ஆரோக்கியமாக இருக்கட்டும். தாதா எங்கிருந்தாலும் நிம்மதியாக இருக்கட்டும்” என்று இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் தெரிவித்திருந்தார்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Akshara haasans makeup artist sachin dies due to covid 19

Next Story
‘நீங்க பக்கத்துல இருந்தா…’ அடடா! கதிர்-முல்லை என்னா ரொமான்ஸ்!Tamil Serial News, Vijay TV Pandian Stores, Kathir Mullai
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com