ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரின் ரசிகர்கள் செம்ம ஸ்ட்ராங். 9 மணிக்கு வேறு சானல் பார்ப்பதில்லை என்கிற கொள்கை முடிவில் இருக்காங்க.
யோகாசனத்தில் முத்தம்: ரகுல் ப்ரீத் சிங்கின் வைரல் வீடியோ
ஆதி பார்வதி ரெண்டு பேரையும் மன்னிக்கவில்லை என்றாலும், வீட்டில் இருந்து வெளியே போக சொல்ல மனசும் இல்லை அகிலாண்டேஸ்வரி அம்மாவுக்கு. வீட்டில் இருந்தாலும், யார் முகத்தையும் பார்க்காமல் ரூமுக்குள் அடைப்பட்டு கிடக்கறாங்க. அப்படி இருக்கும் அம்மாவைப் பார்க்கக் சுந்தரத்துக்குத்தான் முடியவில்லை. சும்மாவா அவருக்கு விசுவாசம்னு பேர் வச்சு நக்கல் அடிக்கிறாள் வனஜா?
அகிலா அம்மாகூட சுந்தரம்.. உன் விசுவாசம் உண்மையானது. அதை நான்தான் சந்தேகப்பட்டு பார்த்துட்டேன். உன் பெண்ணா இருந்தாலும் நீ என்கிட்டே விசுவாசமாதான் இருந்து இருக்கே. அதனால் நீ எந்த விதத்திலும் குற்ற உணர்ச்சி அடைய கூடாது சுந்தரம்னு அவரையும் மன்னிச்சு விட்டுட்டாங்க. அதனால், சுந்தரம் இப்போ தன் பொண்ணு பார்வதி மேல கோவமா இருக்கார். அம்மா எப்போ பார்வதியை மருமகளா ஏத்துக்கறாங்களோ அப்போதுதான் பார்வதியை நான் என் மகளா ஏத்துக்குவேன்னு பிடிவாதமா பார்வதிக்கிட்டே பேசாம இருக்கார்.
சரி விஷயத்துக்கு வரலாம்.. மாமா உங்களுக்கு சூடா எதாவது குடிக்க ஏடுத்துட்டு வரேன் மாமான்னு கிளம்பறா. பார்வதி அந்த கப்பில் எடுத்துட்டு வான்னு சொல்லும் ஆதி , அந்த கப் எங்கேன்னு கேட்கிறான். அவள் அங்கே இருக்குன்னு கண்ணால் ஜாடை காண்பிக்க அந்த கப்பை எடுத்து பார்வதி கையில் தருகிறான் ஆதி. அவள் கப்பை எடுத்துக்கொண்டே சென்று புதினாவை கொதிக்க வச்சு டீ போட்டு, சுடச்சுட கப்பில் ஊற்றுகிறாள். கப்பில் சூடு ஏற ஏற ஆதி பார்வதி ஜோடி ரொமான்ஸ் படம் தெரியுது.
அடியே.. புதினா டீ போட்டு குடுத்து குடுத்து ஆதியை மயக்கி வீட்டுக்குள்ளே மருமகளா வந்துட்ட.. இப்போ இந்த டீ யாருக்குடீன்னு வனஜா கேட்கறாங்க. அவருக்கு என்று பார்வதி சொல்ல, யாருடி அந்த அவருன்னு கேட்க, டி கப்பில் இருக்கும் ஜோடி படத்தை காண்பிச்சு இவர்தான்னு சொல்றா.. அதிர்ந்த வனஜா…இவருன்னா என்று விடாப்பிடியாக கேட்க, என் வீட்டுக்காரர் என்று சொல்லிவிட்டு ஸ்டைலாக நடந்து போகிறாள்.
சரபங்கா நீரேற்று திட்ட டெண்டர் வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மேலே போனால் ஆதி டீயை கொஞ்சமா குடிச்சுட்டு பார்வதிக்கு தர்றான்.. அவள் ஒரு வாய் குடிச்சுட்டு ஆதிக்கு தருகிறாள். நீ பாதி நான் பாதி என்பது இங்கே நீ கொஞ்சம் நான் கொஞ்சம் என்று புதினா டீ புதுசாய் ரொமான்ஸ் பண்ண வைக்குது!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”