Sun TV, Azhagu Serial: சன் டிவி-யின் அழகு சீரியலில் உன் வயசை தாண்டித்தான் நான் வந்து இருக்கேன் பூர்ணா. எல்லாம் எனக்கு தெரியும்னு சொல்றாங்க அழகம்மை. நிஜமாவே பூர்ணா மனசை தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கு ஏத்த மாதிரி அழகம்மை நடந்துக்கறாங்களா?
ரவி அத்தான்... ரவி அத்தான்... என்று ஆசையாக அழகம்மையின் மகனையே சுற்றி வந்த பூர்ணாவை விட்டுட்டு, ரவி நண்பன் இறந்துவிட்டான் என்று அவனது மனைவியை கல்யாணம் செய்துக்கொண்டு வந்து நிற்கிறான். பூர்ணாவுக்கும், ரவிக்கும் கல்யாணம் நடக்க இருக்கும் சமயத்தில், சுதாவுக்கு தாலி கட்டிட்டேன்னு சொன்னா, எந்த அம்மாவுக்குத்தான் கோவம் வராது? கொஞ்சம் புதுமையாத்தான் இருக்காங்க அம்மா அழகம்மை. அதுக்குப் பிறகு பார்த்தால் எப்போதும் சுதாவுக்குத்தான் சப்போர்ட்.
Advertisment
Advertisements
ரவி கல்யாணம் நின்னு போக, அடுத்தது பாவம் மகேஷுடன் பூர்ணாவுக்கு கல்யாணம் நடக்குது. சரி, இதுக்கு பிறகாவது பூர்ணா விஷயத்தில் தலையிடாம இருக்க கூடாதா அழகம்மை. சாஸ்த்திரம் சம்பிரதாயம், முதலிரவு சடங்கு இதெல்லம் வேணாம் பூர்ணா. உன் வயசை நான் கடந்து வந்தவ தான். உனக்கும் மகேஷுக்கும் மனசு கொஞ்சம் சரியாகட்டும். பிறகு இதெல்லாம் பார்த்துக்கலாம்னு சமாதானம் சொல்றாங்க. இதனால் பூர்ணாவுக்கு மட்டும் இல்லை, பூர்ணாவின் அம்மா அழகம்மையின் நாத்தனார் வசந்தாவுக்கும் கோவம் வந்துருது.
வீட்டுக்கு வந்து என் பொண்ணுக்கு செய்ய வேண்டிய சடங்கை கூட செய்யாம எதுக்கு நிறுத்தி வச்சு இருக்கீங்கன்னு சத்தம் போடறாங்க வசந்தா. அப்போது அழகம்மை தன் தரம் தாழ்ந்து பூர்ணாவிடம் வந்து, எதுக்கு பூர்ணா வசந்தாகிட்டே சொன்னேன்னு கேட்கறாங்க. அம்மாவே கேட்கும்போது அம்மாவிடம் ஒரு பொண்ணு நடந்ததை சொல்ல மாட்டாளா? என்ன அத்தை சொன்னேன்.. அம்மா கேட்டாங்க, நீங்க சொன்னதை சொன்னேன்னு சொல்றா பூர்ணா. இப்படித்தாங்க ஒரு நல்ல பெண்ணை சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் கெட்டதை சிந்திக்க தூண்டுது. இப்போ அழகு சீரியலில் வில்லத்தனம் செய்யும்போது அழகில்லாத வில்லியாகிட்டாங்க அழகு பெண் பூர்ணா.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”