Sun TV Azhagu Serial : சன் டிவியின் அழகு சீரியலில் அழகம்மையா நடிகை ரேவதி நடித்து வருகிறார். இவருடன் தலைவாசல் விஜய் பழனிச்சாமி வாத்தியாராக நடித்துள்ளார். வயதானாலும் ரேவதிக்கு இருக்கும் ரசிகர்கள் குறையவில்லை. இவருக்காகவே அழகு சீரியலை பலரும் விரும்பிப் பார்த்து வருகின்றனர். இந்த லாக்டவுன் காலத்தில் அழகு சீரியலை முதலில் இருந்து மறு ஒளிபரப்பு செய்து வருகிறது சன் டிவி. பொது இடத்தில் வச்சு புருஷன் காலில் விழுந்தா அம்மாவுக்கு நல்லதுன்னு ஜோசியர் சொன்னார் என்று பூர்ணா சொல்கிறாள். நண்பன் சுரேந்தரின் மனைவியை இரண்டாவது திருமணம் செய்துக்கறான் அழகம்மையின் மகன் ரவி. இவனுக்காக காத்திருந்த பூர்ணாவுக்கு அழகம்மையின் மகன் மகேஷை திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். அப்போது ஆரம்பிக்கிறது பூர்ணாவின் வில்லித்தன செயல்கள்.
அணு ஆயுதங்களின் இருப்பை அதிகரிக்கும் இந்தியா, சீனா, பாகிஸ்தான் – சர்வதேச அமைப்பு அறிக்கை
தம்பி பொண்டாட்டின்னு கூட பார்க்காமல், அவளை அடிக்கிறான் ரவி. நாத்தனாரின் பெண்ணை கல்யாணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்துகிட்டு இருக்கும்போது ரவி, நண்பன் சுரேந்தர் இறந்துவிட, நண்பனின் குழந்தைக்கு தன்னால் மட்டும் தான் நல்ல அப்பாவாக இருக்க முடியும் என்று சுதாவை கல்யாணம் செய்துகிட்டு வந்து நிற்கிறான். பின்னே ரவி அத்தானுக்காக காத்து இருக்கும் பூர்ணாவுக்கு கோவம் வராதா?
ஆரம்பிக்கிறாள் தனது வில்லி ஆட்டத்தை..... மகேஷ், பூர்ணாவை ரெஸ்டாரெண்ட் அழைச்சுட்டு போயி, பூர்ணா .. இனிமே நாம் ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்வோம். முதன் முதலா என் அம்மாவை கோபமா பேசிட்டேன். மனசு கஷ்டமா இருக்கு.. இனிமேல் இதெல்லாம் இல்லாம நாம ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்வோம் பூர்ணா என்று தான் சொல்கிறான்.. உடனே எழுந்து காலை பிடிச்சு.. எல்லாம் என்னால் தான் மகேஷ். என்னை மன்னிச்சுரு.. என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லு அப்போது தான் நான் எழுவேன் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, அங்கு இருந்த எல்லாரும் வேடிக்கை பார்க்கிறார்கள். மகேஷ் கூனிக் குறுகி வெளியே செல்கிறான். இதை கேள்விப்பட்ட இரு பெண்கள். என்ன பூர்ணா நீயும் மகேஷும் சந்தோஷமாக இல்லையா... ரெஸ்டாரெண்டில் பார்த்ததா சொன்னாங்கன்னு கேட்கறாங்க.
முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களுக்காகவே… அசத்தும் ஸ்டேட் பேங்க்!
இல்லை ஆன்ட்டி.. பொது இடத்துல வச்சு, புருஷன் காலில் விழுந்தா அம்மாவுக்கு குண்மாகிரும்னு ஜோசியர் சொன்னார்னு புதுக்கதையை சொல்லி சமாளிக்கிறாள் பூர்ணா. சீரியலில் நம்ப முடியாத விஷயம் வரும்போது, சீரியல் கேரக்டரஸ் இப்படி சொல்றதில் ஆச்சரியம் என்ன இருக்கு?
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”