Sun TV Kalyana Veedu : சன் டிவியின் 'கல்யாண வீடு' சீரியல், கொரோனா லாக்டவுன் காலத்தில் கடந்த திங்கள் முதல் தினமும் ஒரு மணி நேரம் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. பத்மாவதிக்கு கல்லூரியில் படிக்கும் ஒரு மகள் இருக்க, மீண்டும் தாய்மை அடைஞ்சு இருக்காங்க. இதை வெளியில் சொல்ல வெட்கமாக இருக்கிறது. மகளிடமே சொல்ல மறைத்து இருக்கும் நிலையில், தம்பி பொண்டாட்டி முழுகாம இருக்கிறாள். அப்படி இருக்கையில், இதை எப்படி வெளியில் சொல்வது என்று பத்மாவதி தர்ம சங்கடம் கொண்டு இருக்கும்போது எப்படியோ எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சுருது.
ஜோதிகா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து ஓடிடி-க்கு தயாராகும் வரலக்ஷ்மி!
இந்த விஷயத்தில் பத்மாவதியின் அம்மா கூட கர்மம்.. கர்மம் என்று தலையில் அடிச்சுக்க, பத்மாவின் பெண், அம்மா எவ்ளோ சந்தோஷமான விஷயம். இதுக்கு எதுக்கு தயக்கம் உனக்குன்னு சொல்றது ஒரு ஆறுதல். உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சு என்கிற பாடலில் அர்ஜுன் சுளுக்கு எடுப்பது போல இடுப்பு பிடிச்சுக்குது பத்மாவுக்கு. அவளை படுக்க வச்சு இடுப்பில் ஒத்தடம் குடுத்து கொண்டு, இடுப்பு அடிக்கடி துடிக்குதுன்னு குஷியா பாட்டு படிக்கிட்டு இருக்கார் பத்மா புருஷன். மாமியார் எட்டிப்பார்த்து கர்மம் கர்மம், இதென்ன பகலில் கூத்து. கதவை சாத்திக்கிட்டு செய்யப்படாது என்று அறைக்குள் வந்து திரும்பி நிற்க. எதுக்கு கதவை சாத்தணும். நான் என்ன உங்க மகளுக்கு முத்தமா கொடுத்துக்கிட்டு இருக்கேன், ஒத்தடம் தானே? வந்தது வந்துட்டீங்க, எதுக்கு திரும்பி நிக்கறீங்க, இந்த பக்கம் திரும்புங்க என்று சொல்கிறார் மாப்பிள்ளை.
கொரோனா தொற்று உறுதியான 72 வயது முதியவர் மாயம்! கண்கலங்கி நிற்கும் மகன்
இடுப்பு பிடிக்கற அளவுக்கு அப்படி என்னடி ரெண்டு பேரும் சேர்ந்து செய்தீங்க என்று மறுபடியும் மாமியார் கேட்க, மாப்பிள்ளை பயந்து. நான் ஒன்னும் செய்யலே உங்க மகளையே கேளுங்க என்று சொல்கிறார். ஒண்ணும் செய்யலேம்மா, ரிமோட்டை குனிஞ்சு எடுத்தேன்.. அதுக்கு போயி இடுப்பு பிடிச்சுகிச்சுன்னு சொல்கிறார் பத்மா.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”