Sun TV's Kalyana Veedu Serial : கல்யாண வீடு தொடரில் கலா, சகுந்தலா ரெண்டு பேர் அட்டகாசம் தாங்க முடியாத அளவுக்கு காண்பிக்கறாங்க. இப்படியும் குடும்ப பெண்கள் இருப்பங்களான்னு கேட்கும் அளவுக்கு இந்த சகோதரிகளின் நடத்தை, பேச்சுக்கள் எல்லை மீறி இருக்கிறது.
மருமகளை சந்தேகிக்கும் அளவுக்கு அக்காவை ஏத்தி விடுகிறார் தங்கை சகுந்தலா. ஒரே மருமகள் போரடிக்குது அக்கான்னு ஒரு டயலாக் வருது. ஆமாண்டி போர் தான்.. வீட்டை விட்டு துரத்திடலாம்னு அக்காவும் தங்கையும் பேசிக்கறாங்க. அதுக்கு வசதியா வந்து மாட்டுது, மருமகள் எடுக்கும் டியூஷன். தம்பியை டியூஷனுக்கு விட வரும் அண்ணனுடன் சேர்த்து மருமகள் ரம்யாவை கதைக்கட்டி விட நேரம் பார்த்துக் காத்து இருக்காங்க சகோதரிகள்.
Advertisment
Advertisements
ரம்யாவை கடைக்கு அனுப்பிட்டு, பின்னாலேயே ஒளிஞ்சு ஒளிஞ்சு ரெண்டு பேரும் போறாங்க. இதைத் தெரிஞ்சுக்கிட்ட ரம்யா, ரெண்டு மாமியாருக்கும் கொஞ்சம் ஆட்டம் காண்பிக்க ஆசைப்படுகிறாள். அவங்க பார்க்க வசதியா அந்த பையனுடன் சேர்ந்து கூல் ட்ரிங்க் குடிக்க... அக்கா குளு குளுன்னு கூல் ட்ரிங்க் குடிச்சுட்டு கிளு கிளுன்னு காதல் பண்ணப் போறாங்க அக்கான்னு மறைஞ்சு நின்னு பார்க்கும் சகுந்தலா அக்காகிட்ட சொல்றாங்க.
டைரக்டருக்கு கொஞ்சம் மனசாட்சி இருக்கு போல... அதனால, கலா மருமகளை வீடியோ எடுக்கும்போது எனக்கே என்னவோ போல இருக்குடி.. அவ என் மருமக்களாச்சே.. மனசு பதை பதைக்குதுடின்னு சொல்றது நல்லாருக்கு. இந்த மாதிரி தப்பெல்லாம் செய்தால் உண்மையில் மனசாட்சி இப்படித்தான் அடிச்சுக்கும்.
அந்த வீடியோவை எடுத்துட்டு. அதை பத்திரமா வச்சு காத்துகிட்டு இருக்காங்க மகன் மனோகரன் எப்போ வருவான்.. அவன்கிட்டே இதை காண்பிக்கணும்னு. அவனும் வர்றான்... அந்த நேரம் பார்த்து ரம்யா அந்த பையன் கிட்டேயே பேசிகிட்டு நிக்கறா. மனோகரனிடம் காண்பிக்கும்போது அவன் என்ன செய்தான்? எங்கே காமிக்கறது.. இவங்களை முந்திகிட்டு மனோகரன் ஒரு புது கதை சொல்றானே... இருந்தாலும் அவன் கதைக்கு ஆதாரம் இல்லை.. நம்ம சொல்றதுக்கு வீடியோ ஆதாரம் இருக்குடி...சொல்லிருவோம்னு கிளம்பறாங்க.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"