Sun TV, Kanmani Serial: அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள்… வீடே செம கொண்டாட்டமா இருக்குது. இதுக்கு நடுவுல சவுந்தர்யா, ஆகாஷ் காதல் விளையாட்டுகள் வேற நடந்துகிட்டு இருக்குது. சன் டிவி-யின் கண்மணி சீரியலில் தான் இந்த காட்சி. சவுண்டுக்கு ஆசை ஆசையா கண்ணன் வாங்கிட்டு வந்த புடவையை அக்காக்கள் இருவரும் கட்டி விடுகிறார்கள். அவர்களுக்கே சவுந்தர்யாவின் அழகு மேல் பொறாமை வந்துவிடுகிறது. எல்லாம் அம்மா அப்பாவை சொல்லணும்.. எங்களை அப்படி பெத்துட்டு, உன்னை இப்படி பெத்து இருக்காங்க என்று சின்ன அக்கா சொல்றாங்க. இப்படின்னா சிவப்பா… அழகா லட்டு மாதிரி உன்னை பெத்து இருக்காங்கன்னு சொல்ற சின்ன அக்காவே செம கலரு, என்ன செய்வது கொடுத்து இருக்கும் டயலாக் அப்படி…
கோவிட்-19 பரிசோதனை விலையை குறைக்க வேண்டும்; மாநிலங்களுக்கு ஐசிஎம்ஆர் பரிந்துரை
கண்மணி சீரியலின் 4வது எபிசோடு ஞாபகம் இருக்கா?
முழு வீடியோவிற்கு : https://t.co/boaHIqEPEW
Kanmani | Monday – Thursday | 8.30 PM#Kanmani #KanmaniOnSunTV #SunTV pic.twitter.com/sbeuThLdw7
— Sun TV (@SunTV) May 25, 2020
அப்படின்னா என்று மறுபடியும் கேட்கிறாள் சவுந்தர்யா. அதை நீ அப்பா, அம்மாகிட்டே கேட்டுக்கோன்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் எஸ்கேப் ஆகிட… எப்போது போவாங்க என்று காத்திருந்த சவுந்தர்யா, கண்ணாடியைப் பார்க்கிறாள். அட.. இந்த சாரீ சூப்பரா அள்ளுதே… கண்ணன் மாமா சூப்பர் செலக்ஷன் மாமா என்று பேசிக் கொள்கிறாள். உடனே காதலன் ஆகாஷுக்கு போன் அடிக்கிறாள். எங்கே இருக்கே நீ என்று கேட்க, அவன் சொல்கிறான், உங்க வீடுதான் ரொம்ப பெரிசா இருக்கே, நீ எங்கே இருக்கேன்னு கேட்கிறான். நான் சொல்ல மாட்டேன், நீயே கண்டுபிடிச்சு வா… நான் முத முதலில் சாரீ கட்டி இருக்கேன். நான் புடவை கட்டி இருப்பதை கட்டிக்க போறவன்தான் முதலில் பார்க்கணும்னு ஆசைப்படறேன். எங்கே கண்டு பிடிச்சு வான்னு சொல்லி அங்கும் இங்கும் ஓடுகிறாள். பல பேர் பார்த்துட்டாங்க சவுந்தர்யாவை… பாவம் அவளோ ஆகாஷிடம் தான் முதலில் காண்பிக்கணும் என்று கண்ணாமூச்சு விளையாடி வருகிறாள்.
கங்குலி – டிராவிட் ‘318’ : உலக சாம்பியனை கண்ணீர் விட வைத்த பார்ட்னர்ஷிப் (வீடியோ)
இடையில் கண்ணன் பார்த்துவிடுகிறான். சவுண்டு சவுண்டு என்று அழகை ஆராதிப்பது போல பார்க்கிறான். அப்போதும் ஆகாஷுக்கும், சவுந்தர்யாவுக்கும், கண்ணன் பூஜை வேளையில் கரடி புகுந்தது போலத்தான் தெரிகிறான். ஒரு வழியாக ஆகாஷின் அறைக்குள் வந்த சவுந்தர்யாவை பார்த்து, அவளை கட்டிக்கொள்கிறான் ஆகாஷ். அந்த நேரத்தில், கண்ணன் சவுண்டு சவுண்டு என்று கூப்பிட்டுக் கொண்டே வந்து விட, வடை போச்சே ஃபீலிங் ஆகாஷுக்கு. அது மட்டுமா, அவன் கண் முன்னே சவுண்டின் மேல் கை போட்டு எங்களை போட்டோ எடுங்க என்று விஷயம் தெரியாமல் பேசும் கண்ணன் ஆகாஷை கடுப்பேத்துகிறான்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”