கங்குலி – டிராவிட் ‘318’ : உலக சாம்பியனை கண்ணீர் விட வைத்த பார்ட்னர்ஷிப் (வீடியோ)

அந்த மேட்ச் நியாபகம் நெஞ்சிலே வந்ததே, நண்பனே நண்பனே நண்பனே… டிராவிட்டும், சவுரவும் அடித்த அடி மறக்கவில்லை, அது ஏன் ஏன் நண்பனே…. 90’ஸ் கிட்ஸ் இந்த செய்தியை படித்த பிறகு பீலிங்ஸ் இப்படியாகத் தான் இருக்கும். 1999 ஆம் ஆண்டில் இந்த நாளில் (மே.26) டவுன்டனில் நடந்த…

By: Updated: May 26, 2020, 04:26:42 PM

அந்த மேட்ச் நியாபகம் நெஞ்சிலே வந்ததே, நண்பனே நண்பனே நண்பனே…

டிராவிட்டும், சவுரவும் அடித்த அடி மறக்கவில்லை, அது ஏன் ஏன் நண்பனே….

90’ஸ் கிட்ஸ் இந்த செய்தியை படித்த பிறகு பீலிங்ஸ் இப்படியாகத் தான் இருக்கும்.

1999 ஆம் ஆண்டில் இந்த நாளில் (மே.26) டவுன்டனில் நடந்த இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியின் போது, இந்தியாவின் சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் இரண்டாவது விக்கெட்டுக்கு 318 ரன்கள் எடுத்தனர். அந்த பார்ட்னர்ஷிப் அப்போது ஒருநாள் போட்டிகளில் பெரும் சாதனையாக அமைந்தது.

கோலி vs ஸ்மித்! பெட்டர் பேட்ஸ்மேன் யார்? – தண்ணீர் குடித்து தடுமாறி பதில் சொன்ன பிரட் லீ

அதன்பின்னர், அதே ஆண்டில் சச்சின் – டிராவிட் 331 ரன்கள் பார்ட்னர்ஷிப்  அமைத்தும், கிறிஸ் கெய்ல் – மார்லன் சாமுவேல்ஸ் 372ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனை படைத்தாலும், கங்குலி – டிராவிட்டின் அந்த பார்ட்னர்ஷிப் எப்போதும் பசுமையாக நினைவில் இருக்கும்.


அப்போதைய நடப்பு சாம்பியனான இலங்கைக்கு எதிராக தொடக்க வீரர்களாக சடகோபன் ரமேஷ், சவுரவ் கங்குலி ஆகியோர் களமிறங்கினர். ஆனால், சமிந்தா வாஸ் ஓவரில், ரமேஷ் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோது இந்தியர்களுக்கு தெரியவில்லை, ஒரு பெரும் சாதனை இன்று படைக்கப்பட போகிறது என்று!.

அந்த போட்டியில் தான் கங்குலி, தனது வாழ்நாள் அதிகபட்ச ஒருநாள் போட்டி ஸ்கோரான 183 ரன்களை தனது கிரீடத்தில் பொறித்தார். டிராவிட் 145 ரன்கள் எடுத்தார். 46வது ஓவரில், இந்தியா 324 ரன்கள் எடுத்திருந்த போதுதான், இரண்டாவது விக்கெட் விழுந்தது. இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் குவித்தது.


போர்டில் ஸ்கோர் பார்த்த இலங்கை, அங்கேயே மயங்கி விழ, 42.3 ஓவர்களில் 216 ரன்கள் போதுமென்று டீசண்ட்டாக சென்றுவிட்டது.

கிளைமேக்ஸ் இனி தான்… இப்போட்டி முடிந்த பிறகு பேசிய டிராவிட், ஆஃப் சைடில் எந்த பந்துகளையும் அடித்து விளாச கூடியவர் கங்குலி. ஆஃப் சைடில் கடவுளுக்கு அடுத்தபடியாக கங்குலி தான் என்று தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Sourav ganguly rahul dravid 318 runs record partnership cricket news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X