ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ, ஜிம்பாப்வே முன்னாள் வீரர் போமி எம்பாங்வாவுடன் வீடியோ காலில் உரையாடினார். அப்போது விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் ஆகிய பேட்ஸ்மேன் எனும் கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
25, 2020
எம்பாங்வா - விராட் கோலி, ஸ்மித் ஆகிய இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்?
பிரட் லீ - இந்த கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன்பு நான் சிறிது தண்ணீர் குடித்துவிடுகிறேன். உண்மையில் இது மிகவும் கடினமான கேள்வி. இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று சொல்லவே முடியாது.
அன்று ஹாட்ரிக்; இன்று ஹெராயின் - இலங்கை கிரிக்கெட் வீரர் கைது
விராட் கோலி டெக்னிக்கலாக மிகச் சிறந்த வீரர். அவரது ஷாட்ஸ் அற்புதமாக இருக்கும்.
ஆனால், ஸ்டீவ் ஸ்மித் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தடை செய்யப்பட்டு திரும்ப வந்திருக்கிறார். மன ரீதியாக அவர் வலிமையுடன் திரும்ப வந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். ஆகையால், இருவரில் சிறந்தவர் ஸ்மித் என சொல்லலாம். ஸ்மித் பிராட்மேன் போல சிறந்த வீரராக உருவாகலாம்.
ஆனால், இப்போதும் சொல்கிறேன், இருவரில் பெஸ்ட் பேட்ஸ்மேன் யார் என்று சொல்வது கடினம் என்று தெரிவித்துள்ளார்.
ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மறக்க முடியா பங்களிப்பு - விளையாட்டு பிரபலங்கள் இரங்கல்
முன்னதாக, ஸ்டீவ் ஸ்மித் தடைக் காலத்தில் இருந்த போது உலகின் நம்பர்.1 டெஸ்ட் பேட்ஸ்மேனாக கோலி வலம் வந்தார். ஆனால், ஸ்மித் மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்பி, தனது அதே மிரள வைக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி, கோலி வசம் இருந்த நம்பர்.1 இடத்தை தட்டிப்பறித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil