ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மறக்க முடியா பங்களிப்பு - விளையாட்டு பிரபலங்கள் இரங்கல்

இந்தியாவின் மூத்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங். அவர் கடந்த 1948, 1952, 1956 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற பெருமைக்குரியவர்.

ஒலிம்பிக்கின் ஆடவர் ஆக்கி இறுதி போட்டியில் தனிநபராக அவர் கோல்கள் அடித்து பதிவு செய்த உலக சாதனைகள் இன்று வரை முறியடிக்கப்படவில்லை.

தமிழகத்தின் விஜய் ஷங்கரை தேர்வு செய்தது பெரும் அதிர்ச்சி! வார்த்தை மோதலில் கம்பீர் – எம்.எஸ்.கே பிரசாத்

உடல்நல குறைவால் பஞ்சாபின் மொகாலி நகரில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் கடந்த 8ந்தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 2 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை காலமானார். இதனை அவரது பேரன் கபீர் உறுதி செய்துள்ளார். அவருக்கு வயது 96. சிங்கிற்கு சுஷ்பீர் என்ற மகளும், கன்வால்பீர், பரன்பீர் மற்றும் குர்பீர் என 3 மகன்களும் உள்ளனர்.

கடந்த 1957ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி அவர் கவுரவிக்கப்பட்டார்.

இந்நிலையில், மறைந்த மூத்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங்குக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close