சன் டிவி, கண்மணி : முத்த சண்டையில் கிரேட் எஸ்கேப்…

முத்தம் நீ கொடுத்தாலும், நான் கொடுத்தாலும் சரி.. ரெண்டும் ஒண்ணுதான் என்று சொல்கிறாள் சவுந்தர்யா.

By: Published: June 10, 2020, 4:36:58 PM

Sun TV, Kanmani Serial : சன் டிவியின் கண்மணி சீரியலில் ஆகாஷ், சவுந்தர்யா காதலுக்கு இடையில் சிவ பூஜையில் கரடி மாதிரி இருக்கும் கண்ணன் , இதோ இப்போது ஆகாஷ் முத்தம் கேட்கும் போதும் வந்து விடுகிறான். சவுந்தர்யா அம்மா அப்பாவுக்கு.. அதாவது கண்ணன் அக்கா, மாமாவுக்கு 60-ம் கல்யாணம். இந்த கல்யாணத்துக்கு விருந்தாளியாக வந்திருக்கும் ஆகாஷ், சவுந்தர்யாவின் காதலன். அவனுக்கு இப்போது சவுந்தர்யா கொடுத்திருக்கும் அசைன்மென்ட், சவுந்தர்யாவின் அப்பா மனதில் இடம்பெற்றுவிட வேண்டும். அப்போது தான் காதலை சொல்லி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கமுடியும். அதுக்குள்ளே இந்த ஆகாஷ் பயலுக்கு அவசரம் வந்துவிடுகிறது. அவனைத் தேடி வந்த சவுந்தர்யாவிடம் ஒரு முத்தம் கேட்கிறான்.

இன்ஸ்டாவில் ஒரு கலக்கு கலக்கும் பாவனா.. டான்ஸ், சிங்கிங் எதையும் விடல

முத்தம் கேட்டால் அடி வாங்குவே.. முத்தத்துக்கு பதில் உதை தான் கிடைக்கும் என்றெல்லாம் சொல்லும் சவுந்தர்யா, என்ன இருந்தாலும் அவளும் பெண்தானே… அவளுக்கும் ஆசை இருக்கும் தானே என்பது போல, அங்கேயே சுற்றி சுற்றி வருகிறாள்.

முதலில் நான் கொடுத்த அசைன்மென்டை முடி.. அப்போது தான் முத்தம் எல்லாம் என்று சொல்கிறாள் சவுந்தர்யா. இப்படியே போனால் நம்ம 60-ம் கல்யாணம் தான் வரும். வந்ததுக்கு ஒரு முத்தம் கொடு என்று கேட்கிறான். அதெல்லாம் முடியாது என்று சிணுங்குகிறாள் சவுந்தர்யா. அப்படின்னா நான் தரேன்னு கிட்டே வர்றான் ஆகாஷ். முத்தம் நீ கொடுத்தாலும், நான் கொடுத்தாலும் சரி.. ரெண்டும் ஒண்ணுதான் என்று சொல்கிறாள் சவுந்தர்யா. மறுபடியும் ஒரே ஒரு முத்தம் என்று ஆகாஷ் கெஞ்ச, சரி கொடுத்துக்கோ என்று கண்களை மூடிக்கொள்கிறாள் சவுந்தர்யா. என்னவோ கமல்ஹாசன் மாதிரி ஒரு முத்தத்துக்கு தயாராகி, சவுந்தர்யா கிட்டே நெருங்க… நான் கொடுத்ததை திருப்பி கொடுத்தா முத்தமா கொடு.. அதை மொத்தமா கொடு என்று ரஜினி பாடலை பாடிக்கொண்டு அங்கே வருகிறான் கண்ணன்.

சினிமான்னா விஜய், கிரிக்கெட்ன்னா தோனி: ஜெ.அன்பழகன் ஃபேன் பாய் மொமெண்ட்ஸ்!

ஆகாஷ் ஒளிந்துக்கொள்ள… அங்கே, சீக்கிரம் குடுடா… யாராவது வந்துட போறாங்க என்று சொல்லி கண்களை மூடிக்கொண்டு வாயை முத்தம் வாங்க குவித்தபடி நிற்கிறாள் சவுந்தர்யா. கண்ணன் தான் ஏற்கனவே ஆர்வ கோளாறில் இருக்கிறானே… தன்னிடம் தான் முத்தம் கேட்கிறாள் என்று இவனும் வாயைக் குவித்து சவுந்தர்யா அருகில் சென்று விடுகிறான். அப்போது பார்த்து திடுக்கிட்டு விழித்த சவுந்தர்யா மாமா என்று அதிர்ச்சியாகி நிற்கிறாள். கண்ணன் தடுமாறி நிற்க, வெட்கத்தில் ஓடிவிட்டாள் சவுந்தர்யா.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Tamil serial news sun tv kanmani soundarya kannan akash

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X