Sun TV Magarasi Serial: மகராசி சீரியலில் புவியை காணோம். புவியைத் தேடுகிறோம் என்கிற ட்விஸ்ட்டை வைத்தே ஆரம்பம் முதல் இப்போது வரை சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. இத்தனைக்கும் புவி பக்கத்தில் தான் இருந்தான். எப்படியாவது இன்று கண்டு பிடித்துவிடுவார்கள், புவி குடும்பத்துடன் சேர்ந்து விடுவான், என்று மக்கள் சீரியலை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். இப்படியே ஒவ்வொரு எபிசோடும் கடந்துக்கொண்டு இருக்கையில், புவி வாசிக்கும் ஒரு டியூனை அன்புவாக நடித்துக்கொண்டு இருக்கும் புவி, மவுத் ஆர்கனில் வாசித்தும் கூட பாரதிக்கு இவன்தான் புவி என்று தெரியாமல் போனது.
இந்த நேரத்தில் லாக்டவுன் வந்து விட, புவி உயிரோடு இருக்கிறானா? புவியை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று மக்கள் தெரிந்து வைத்திருக்கும் விஷயத்தை என்னவோ, பெரிய சஸ்பென்ஸ் போல மகராசி சீரியல் ஒளிபரப்பானது. இந்த சீரியல் தற்போது சன் டிவியில் மதிய நேரத்தில், முதல் எபிசோடில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. மகராசி சீரியலின் ஆரம்பம் ஹரித்துவார் நகரில் படப்பிடிப்பு. அதுவும் கங்கை நதி ஓரம் எடுத்த காட்சிகள் மிக அற்புதமாக இருக்கின்றன. ஹரித்வார் ரயில் நிலையம், கங்கை நதியின் நடுவில் அமைந்து இருக்கும் பிரமாண்ட சிவன் சிலை, என்று பார்க்கவே அற்புதமாக இருக்கிறது.
Advertisment
Advertisements
பெரும் பட்ஜெட் படங்களில் வைக்கும் காட்சிகள் போன்று ரயிலில் எடுத்த காட்சிகள் கூட அருமையாக இருக்கிறது. கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் இந்த மகராசி சீரியல் ஆரம்பத்தில் இவ்வளவு அமர்க்களமாகவா இருந்தது, என்று நினைக்கும்படி காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. எல்லாவற்றையும் இழுத்தடிக்கும் இயக்குநர், கங்கை நதி கரையோரம் எடுக்கப்பட்ட காட்சிகளையும் இழுக்கடிச்சு, இன்னும் கொஞ்சம் காண்பித்து இருந்தால்தான் என்னவாம்?