Sun TV, Metti Oli : மெட்டி ஒலி சீரியலில் ஆரம்பமே மாணிக்கம் அம்மா கறாரா நடந்துக்கறது தான். சரோவை பொண்ணு பார்க்க போகையில், யதார்த்தமாக மாணிக்கம் பூ வாங்க, அப்போதே ராஜம் அம்மா தான் மாமியாராக போகும் கெத்தை காண்பிச்சுடறாங்க. மாணிக்கம் அப்போதே அடக்கி வாசிக்க ஆரம்பிச்சு, முதன் முதலில் பொண்டாட்டியைத் தொட, அவளை அடிக்கும் அளவுக்கு நிலைமை மாறிப்போகுது. அம்மாவுக்கு ஒன்று என்றால் துடிக்கும் பிள்ளையாக மாணிக்கம் இருக்க, இதை வச்சு காரியத்தை சாதிக்க ஆரம்பிக்கறாங்க ராஜம் அம்மா.
பின்னர், மகள் நிர்மலாவும் தானும் டூர் போகணும் என்று கிளம்பிப் போக, அந்த சமயம் பொண்டாட்டி மீது அதிகமாகவே மோகத்தை அள்ளித் தெளிக்கிறான் மாணிக்கம். கடைக்கு அழைச்சுட்டு போவது என்ன, முதன் முதலாக கிஃப்ட் என்று அழகான மெட்டி ஒன்றை வாங்கித் தருவது என்ன, பீச்சுக்கு அழைச்சுட்டு போய், பூ வாங்கித் தலையில் வச்சு விடுவது என்ன, என்று பார்ப்பவர் மகிழும் அளவுக்கு சீரியல் காட்சிகள் நன்றாகவே இருக்கிறது. அந்த நேரம் பார்த்து சரோவின் அப்பா குலதெய்வம் கோயிலுக்கு போகலாம் என்று சரோவையும், மாணிக்கத்தையும் கூப்பிட, அத்தை வரட்டும் பிறகு போகலாம் என்று சரோ சொல்கிறாள்.
Advertisment
Advertisements
மாணிக்கம் சரோவின் மீது பிரியத்தை கொட்ட ஆரம்பித்து இருக்கும் தருணமாச்சே. அம்மா வரும்போது வரட்டும். நாம குலதெய்வம் கோயிலுக்கு போவதை தள்ளிப் போட வேண்டாம் என்று சொல்ல, கிளம்பி விடுகிறார்கள். அந்த சமயம் பார்த்து ராத்திரி நேரத்தில் டூர் முடிந்து வீட்டுக்கு வந்த அம்மா ராஜமும், நிர்மலாவும் வீடு பூட்டிக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். இதில் மாமியார் ராஜம் ரொம்பவே வீம்பு காட்டி, உடனே வான்னு மகனுக்கு போன் செய்ய, அவசரம் அங்கேயே தொற்றிக்கொள்கிறது. கிளம்பினாலும் கடைசி பஸ் போயே போயிருச்சு. அவர்கள் அன்று இரவு தங்கிவிட்டு விடியற்காலை போகலாம் என்று வீட்டில் படுத்து விடுகிறார்கள்.
ராஜம் மகளுடன் பிடிவாதமாக தெரு வாசற்படியில் உட்கார்ந்து கிடக்க, மகனும், மருமகளும் வந்தததும் வெடிக்கறாங்க பாருங்க... உனக்கு என்னடா அவ்ளோ மோகம்? உன் அம்மா எப்படி வேணும்னாலும் போகட்டும்னு விட்டுட்டு.. தங்கச்சியை யார் வேணும்னாலும் இழுத்துகிட்டு போனால் என்னன்னு மாமனார் வீட்டுக்கு கிளம்பிட்டியான்னு கத்தறாங்க. வயதான மனுஷி, வயதுக்கு வந்த பெண்ணை இப்படியும் விட்டுக்கொடுத்து பேசுவங்களா என்று யோசிக்க வச்சுருச்சு... அப்பா என்ன வாய்.. என்ன வாய்... சரியான வாயாடி மாமியார்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”