/tamil-ie/media/media_files/uploads/2020/05/Metti-oli-vanaja.jpg)
Metti Oli Serial, Tamil Serial news, serial news tamil, sun tv serials, தமிழ் சீரியல் செய்திகள், சன் டிவி சீரியல், மெட்டி ஒலி சீரியல்
Metti Oli Vanaja: சின்னத்திரை சீரியலில் பொறுமையான பெண்ணாக யதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர், வனஜா. விஜய் தொலைக்காட்சியின் மூலமாக சின்னத்திரையில் நுழைந்தவர். சன் டிவியில் தொடர்ச்சியாகப் பல சீரியல்களில் நடித்து தற்போது, பிரேக் எடுத்திருக்கிறார்.
டாஸ்மாக் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலருக்கு கொரோனா! காவல் நிலையம் அடைப்பு
வனஜா தனது பள்ளி நாட்களிலிருந்தே நாடகம் மற்றும் நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்தாராம். பள்ளி நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் நிகழ்வுகளில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய திறமைகளில் நம்பிக்கையுடன் இருந்ததால், அவரை குடும்பத்தினர் ஊக்குவித்தனர். வனஜா அத்தகைய வாய்ப்புகளை கவனித்து சில தொலைக்காட்சி சீரியல்களில் சிறிய பாத்திரங்களை முதலில் பெற்றார்.
பின்னர் பிரபல சீரியலான “மெட்டி ஓலி” யில் நடிக்க வனஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் “லீலா” என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்தார். பாஸிட்டிவான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததால், அனைவராலும் விரும்பப்பட்டார். அவரது அற்புதமான நடிப்பு வனஜாவுக்கு இன்னும் பல வாய்ப்புகளை பெற்று தந்தது. அதில் சிறந்த கதாபாத்திரங்களாக கவனமாக தேர்வு செய்து நடித்தார் வனஜா. எடுத்துக்காட்டாக, “பொன்னூஞ்சல்” சீரியலில் அவரது பங்கு நன்கு அறியப்பட்டதோடு, ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இத்தகைய அற்புதமான வெற்றிக்குப் பிறகும், தான் இன்னும் கற்றலில் ஆர்வமுள்ள ஒரு மாணவி தான் என்று கூறுகிறார் வனஜா.
/tamil-ie/media/media_files/uploads/2020/05/Vanaja-with-metti-oli-artists-1024x680.jpg)
தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி ஒரு நேர்க்காணலில் குறிப்பிட்ட வனஜா, ”சிங்கம் (1)’ படத்துக்காக டைரக்டர் ஹரி ஆடிஷனுக்கு வரச் சொல்லியிருந்தார். முதலில் என் ரோல் பற்றி சொல்லலை. நடிக்க ஆரம்பிக்கும்போது தான் நெகட்டிவ் ரோல்னு தெரிஞ்சது. கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. `யோசிக்காதீங்க. நீங்க நடிச்சா தான் சரியா இருக்கும்’னு சொன்னாங்க. ஒரு நல்ல ஆர்ட்டிஸ்ட் எந்தக் கதாபாத்திரத்தையும் உள்வாங்கி நடிக்கணும். நானும் நடிச்சேன்.
ஹரி சாரின் அசிஸ்டென்ட் பரத் குமார் தான் என் கணவர். அந்தப் படத்தில் நடிச்சப்போ எங்க சந்திப்பு நடந்துச்சு. கல்யாணம் பண்ணிக்க விரும்பி வீட்டுக்கு வந்து பெண் கேட்டார். இப்போ எங்களுக்கு ரெண்டு குழந்தைங்க. கல்யாணத்துக்கு அப்புறம் `பொன்னூஞ்சல்’ சீரியலில் மூன்று வருஷம் நடிச்சேன். கர்ப்பமானதும் சீரியலுக்கு பிரேக் எடுத்துக்கிட்டேன்” என்றார்.
ஊரடங்கு அவசர பயணம்: இ-பாஸை உடனடியாக வழங்க சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
மேலும் தொடர்ந்த அவர், “சாயங்காலம் 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை வரிசையாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒரு சீரியல் தவிர மற்ற எல்லாத்திலும் என்னைப் பார்க்கலாம் என்கிற அளவுக்கு எல்லாத்திலும் நடிச்சேன். சீரியலில் எப்படிப் பாசமும் பொறுமையும் நிறைந்த கதாபாத்திரத்தில் நடிச்சிருப்பேனோ, நிஜத்திலும் அப்படித்தான். எந்த விஷயத்திலும் ஓவர் எமோஷனல் ஆகாமல் யோசிச்சு முடிவுப் பண்ணுவேன்” என பெருமைப்பட்டுக் கொள்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.