Sun TV, Nayagi : நாயகி சீரியலில் திருமுருகன், ஆனந்தி கல்யாணம் நடந்தது நிஜமா, நிஜமில்லையான்னு கேள்வி கேட்கறதுக்குள்ளே. முதலிரவு ஏற்பாடுகள் நடக்குது. நிலவைக் கொண்டு வா கட்டிலில் கட்டிவை. மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை, இன்று முதலிரவு என்று குஷியில் திருவும் ஆனந்தியும் இருக்க. முதலிரவு நடக்குமா என்று கேட்கும் அளவுக்கு கலிவரத்தான் சூழ்ச்சிகள் செய்கிறார்.
இதையும் கெடுக்க சிறைக்குள் இருக்கும் கலிவரதன் தான் பெற்ற மகள் மூலமே ஏற்பாடுகள் செய்யறார். இப்படி எல்லாம் காண்பிச்சால், பிறகு அப்பாவுக்கும் பெண்ணுக்குமான உறவு சுமுகமாக இருக்குமா? சீரியல்களில் சுமுகமாகத்தான் இருக்கிறது. ஒண்ணும் சொல்ல முடியாது. அனு சிறைக்குள் அப்பாவிடம், அப்பா, அண்ணனுக்கும் ஆனந்திக்கும் தான் கல்யாணம் ஆகி அவங்க ஆனந்தி வீட்டில் இப்போ இருக்காங்களே. அதுவும் அந்த சற்குணம் வேற அங்கே இருக்கா. அதனால இனிமே நாம என்னப்பா செய்ய முடியும்னு கேட்குது. செய்ய முடியும் அனு. நீ உதவி செய்தால் எப்படியும் திருவையும், ஆனந்தியையும் பிரிக்க முடியும்னு அப்பா சொல்றார். என்னப்பா உதவின்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக்கிட்டு, சொல்லுங்கப்பா செய்யறேன்னு அணு கேட்கிறாள். இல்லைம்மா ஆனந்தியும், திருவும் இன்றைக்கு ஒண்ணு சேர கூடாது. அவங்க சாந்தி முகூர்த்தத்தை நிறுத்திடு போதும்னு சொல்றார் அப்பா.
இன்னிக்கு மட்டும் நிறுத்தினா எப்படிப்பா. அப்புறம் ஒவ்வொரு நாளும் அவங்களை நாம பார்த்துகிட்டே இருக்க முடியுமான்னு பொண்ணு நல்ல கேள்வி தான் கேட்குது. இல்லை.. உங்க அண்ணன் திருவுக்கு உன் அம்மா மேல் பாசம் அதிகம். எப்படியாவது அவளுக்கு நாங்க தரும் மருந்து கொடுத்து, அம்மாவுக்கு உடம்பு சரி இல்லைன்னு சொல்லி திருவை வரவழைச்சுரு. எப்படியும் மூணு நாளைக்கு உங்கம்மா ஆஸ்பிடலில் படுத்து இருக்கற மாதிரி நான் செய்துடறேன். பிறகு ஜெயிலில் இருந்து வந்து நான் பார்த்துக்கறேன்னு அப்பா சொல்றார். சரிப்பான்னு கொஞ்சம் கூட பயம், பதட்டம் இல்லாம சொல்லும் அனு, வீட்டுக்கு வந்தும் அதே முயற்சியில் இருக்கா. ரெண்டு கிளாஸ் பாலில் ஒரு கிளாசில் ஏதோ மருந்து கலந்துவிட்டு, அம்மாவை குடிக்க சொல்ல, எனக்கு பால் எல்லாம் வேணாம். நான் சமைச்சு சாப்பிட்டுட்டு நிம்மதியா தூங்கப் போறேன்னு சொல்லிட்டாங்க அம்மா.
இங்கே திருவுக்கும் ஆனந்திக்கும் முதலிரவு ஏற்பாடு நடக்க, கல்யாணம் ஆகி பல மாதங்கள் ஆகியும் ஒண்ணு சேராமல் இருக்கும் செழியனுக்கும்., கண்மணிக்கும் முதலிரவு அறை ஏற்பாடுகளை கவனிக்கும்போது காதல் பத்திக்குது. எனக்கு முதலிரவு படுக்கையை அலங்கரித்து பழக்கமில்லை என்று அவன் சொல்கிறான். நான் கத்து தரேன்னு இவள் சொல்கிறாள். ரோசாப்பூவை எடுத்து பார்த்தார் கட்டுங்கன்னு சொல்கிறாள் இவள். இருவருக்கும் பேச்சு எழவில்லை.. ஒன்லி காத்துதான் வருது. இருவரும் கையைப் பிடித்துக்கொண்டு மெய் மறந்து நிற்க, ஆனந்தி வந்து பார்த்துட்டா. என்ன கண்மணி சாந்தி முகூர்த்தம் உங்களுக்கா இல்லை எங்களுக்கான்னு தெரியலியேன்னு கலாய்க்க. இப்போதான் ஹல்க் ஒரு ஃபார்முக்கு வந்து இருக்குடி. இது இப்படியே இருக்குமா, இல்லை மறுபடியும் புறப்பட்டு விடுமானு தெரியலைடி என்று அநியாயத்துக்கும் வெட்கப்படுகிறாள் கண்மணி. இப்படி கதை போகும் நாயகி சீரியல் எப்போதும் ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து வெற்றி நடை போட்டு வந்தது. இப்போது லாக்டவுனுக்குப் பிறகு மறுபடியும் விட்ட இடத்தில் இருந்து ஒளிபரப்ப படும்போது எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.
டிடி நேஷனல் சானல் ராமாயணம், ஸ்ரீ கிருஷ்ணா, மகாபாரதம் போன்ற சீரியலால் முதலிடத்தை பிடித்து, மக்கள் மனதை கவர்ந்துள்ள நிலையில், தமிழ் சானல்கள் வழக்கம் போல தங்களது நிகழ்ச்சிகள் ஒளிபரப்பைத் துவங்கினால் தங்களுக்கான விட்ட இடத்தை பிடிக்குமா என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”