Naayagi Serial: எல்லா முயற்சியும் வேஸ்ட் : தோல்வியின் நாயகி அனன்யா
திருவை கல்யாணம் செய்துக்கொண்டே ஆகணும்னு பிடிவாதமா இருக்கும் அனன்யா போடும் திட்டங்கள் ஒவ்வொன்றும் ரூம் போட்டு யோசிப்பாங்களோன்னு கேலி பேசும் அளவுக்குத்தான் இருக்கிறது.
Tamil Serial News : நாயகி தொடரில் தோல்வியின் நாயகி அனன்யா.. என்று சொல்லும் அளவுக்கு தொடர் தோல்வி அனன்யாவுக்கு. ஆனால்,சளைக்காமல் கதையை நீட்டி இழு இழுன்னு கொண்டு போறாங்க. கடந்த வாரம் முதல் கல்யாண மண்டப காட்சிதான்... அதிலும் ஒரே காஸ்டியூமில் ஆனந்தியை ரசிகர்கள் பார்க்க போரடிக்குதுன்னு சொல்ற அளவுக்கு ஒரு வாரமா ஒரு நாள் இரவு காட்சிகள்தான் ஒளிபரப்பாகி வருது.
திருவை கல்யாணம் செய்துக்கொண்டே ஆகணும்னு பிடிவாதமா இருக்கும் அனன்யா போடும் திட்டங்கள் ஒவ்வொன்றும் ரூம் போட்டு யோசிப்பாங்களோன்னு கேலி பேசும் அளவுக்குத்தான் இருக்கிறது. அனன்யாவை குள்ள கத்திரிக்காய் என்று கேலி செய்யும் சற்குணம் ஒரு வாரமாக நடிப்பில் அசத்தி வருகிறார். நடிகை அம்பிகாவுக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு ரசிகர்கள் மனதில் நிற்குபடியான நடிப்பு.
ஆனால், அனு கல்யாணத்தை இவ்ளோ இழுக்கறது... அனன்யா ஒவ்வொரு முறையும் சதித் திட்டங்கள் தீட்டுவது என்று இருப்பதை மக்கள் பொறுமையாக பார்க்கிறார்கள் என்று சீரியல் குழு நினைத்துக்கொண்டு இருக்கிறது. ஆனால், பிபி ஏறுது.. இயக்குநரை கடத்துங்கள் என்று கூட்டமாக ஹாலில் உட்கார்ந்து சீரியல் பார்ப்பவர்கள் புலம்பித் தீர்க்கிறார்கள்.
மித்ரனை வெளியில் தேடி அலைந்து கொண்டு இருக்க. அவனை கல்யாண மண்டபத்தில் ஒரு தண்ணீர்த் தொட்டிக்குள் மறைச்சு வச்சு இருக்காங்கன்னு ரொம்ப ஈஸியான குளூவில் கண்டு பிடித்து விடுகிறாள் ஆனந்தி. ஆனால், பாருங்க.. தண்ணீர் தொட்டிக்குள் மித்ரன் இருப்பதை பார்த்த உடனே, இந்த ராத்திரி நேரத்தில் ரொம்ப தூரம் போயிருக்க முடியாது... முதலில் ஹோட்டல் தண்ணீர்த் தொட்டிகளில் பார்ப்போம் என்று யாருக்கும் தோன்றவில்லையே... நம்மை யோசிக்க வைக்கறாங்க பாருங்க.. அதுதாங்க நாயகி!