tamil serial news, nila serial sun tv, சீரியல் செய்திகள், தமிழ் சீரியல்
Sun TV, Nila Serial : சன் டிவியின் நிலா சீரியலில் விஜே பவித்ரா நாயகியா நடிச்சு இருக்காங்க. சன் சிங்கர் நிகழ்ச்சியை மட்டும் இல்லாமல், சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியையும் அவ்வப்போது தொகுத்து வழங்கி வந்தார் பவித்ரா. லாக்டவுன் ஆரம்பித்த காலத்தில் இருந்து நிலா சீரியல், முதல் எபிசோடில் இருந்தே ஒளிபரப்பாகி வருது. மதிய நேரத்தில் எப்போதும் போல மறு ஒளிபரப்பும் தொடர்ந்து வருது.
ஆரம்பத்தில் இருந்து சீரியலை பார்க்கும்போது, ஆரம்பித்த புள்ளியை விட்டு, தற்போது எங்கோ பயணித்துக்கொண்டு இருந்து இருக்கிறது. அறியாது மக்கள் அதை பார்த்து விட்டு, இப்போது முதல் எபிசோடில் இருந்து பார்க்கும்போது, என்ன இப்படி கதையை சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் கொண்டு போயி இருக்காங்களேன்னு நினைக்கிறாங்க. மக்கள் மெகா சீரியல்கள் பற்றி அறிந்துக்கொள்ள இந்த லாக்டவுன் காலம் நல்ல காலம் தான்.
Advertisment
Advertisements
இந்த சீரியலில் நிலாவும், அசோக்கும் ஒரு ஹோட்டலில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது அசோக்கின் வீட்டில் வேலை செய்யும் ரேவதி, எதுக்கு அந்த ஹோட்டலுக்கு வர்றாங்கன்னே தெரியலை. அங்கே வந்து, இவங்க ரெண்டு பேரும் என்ன தனியா வந்து இருக்காங்கன்னு நினைச்சுகிட்டே, அவங்க ஒரு டேபிள் முன் உட்கார்ந்துக்கறாங்க. இப்போ, நிலாவும், அசோக்கும் பேசுவதை ஒட்டு கேட்கறாங்க. ஆமாம், இப்படி எல்லாம் சீரியல்களில் அடிக்கடி யாராவது ஒருத்தர் பேசுவதை இன்னொருத்தர் ஒட்டு கேட்பது போல காண்பிக்கறாங்களே... கொஞ்சமாவது உடம்பு கூசாது? நிஜமா ஒட்டு கேட்பது என்பது எவ்ளோ பெரிய கேவல செயல். இதை அடிக்கடி சீரியல்களில் காமிக்கறாங்க. இது தப்பில்லைன்னு இன்றைய தலைமுறை நினைக்க மாட்டாங்க? லாக்டவுனுக்குப் பிறகு இதை எல்லாம் யோசிச்சு சீரியல் எடுக்கலாம்.