Sun TV, Roja Serial : ஐ லவ் யூ என்று காதலை சொல்வது தான் காலம் காலமாக பின்பாற்றிவரும் முறை. இதை அவரவர் எப்படி எந்த நேரத்தில் சொல்ல வேண்டுமோ அப்படி சொல்லி, காதலில் சக்ஸஸ் ஆகிறார்கள். சிலர் காதல் எப்படி சொன்னாலும் தோல்வியில் முடிந்து போகிறது. சன் டிவியின் ரோஜா சீரியலில் தனது ஒரு காலை மடக்கி நின்று, அதில் ரோஜாவை கூப்பிட்டு உட்கார வைத்து, போக்கே கொடுத்து, ஐ லவ் யூ என்று சொல்வது போல பாவனை செய்கிறான் அர்ஜுன். இப்படி சொன்னால் ஏற்கனவே அவன் மீது காதலில் இருக்கும் ரோஜாவுக்கு பிடிக்காமல் போகுமா என்ன? ஆசையாக பொக்கேவை வாங்கிக்கொண்டு வெட்கத்துடன் ஓடுகிறாள்.
யாருமில்லா கோவிலுக்கு விசிட் அடித்த யானைகள் -மருதமலையில் ஓவர் அட்டகாசம்
ஒரு வருஷம் ஒப்பந்தம் செய்துக்கொண்டதன் பேரில் தான் ரோஜாவும், அர்ஜுனும் கல்யாணம் செய்துக்கொண்டனர். ஒரு பையனும், பெண்ணும் சேர்ந்து ஒரே அறைக்குள் வாழ்ந்தால், அவர்களுக்குள் காதல் மலரத்தான் வேண்டும். அப்படித்தான் இங்கு இவர்களுக்குள்ளும் காதல் மலர்ந்து பாடாய் படுத்துகிறது. ஒரே அறைக்குள் இருவரும் பார்த்துக்கமா நடக்கறாங்க. அப்புறம் மோதிக்கறாங்க. சரி என்று அவள் ஒரு வழியில் செல்ல, இவன் ஒரு வழியில் செல்ல, அப்போதும் இருவரும் மோதிக்கொள்கிறார்கள். திடீரென்று பார்த்தால் ரோஜா அர்ஜுனை காணவில்லை என்று தேடுகிறாள். அர்ஜுன், ரோஜாவை காணவில்லை என்று தேடுகிறான். இருவரும் பின்புறமாக முதுகில் மோதிக்கொண்டும் தெரியவில்லை. கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பாருங்களேன்.
’கல்யாணம் பண்ற மாதிரி ஒரு படம் நடிங்க’: சூர்யாவுக்கு 90’ஸ் கிட்ஸ் கோரிக்கை
பின்பு மறுமுறை முதுகில் இடித்துக்கொள்ளும்போது கண்டு பிடித்து விடுகிறார்கள். ரோஜாவை முன்னுக்கு இழுத்து, அவள் கூந்தலை ஒதுக்கி முதுகைத் தடவி கட்டிக்கொள்கிறான் அர்ஜுன். இருவரும் ரொமான்ஸாக ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறார்கள். ரோஜாவை கட்டிக்க வேகமாக வருகிறான் அர்ஜுன். அவள் ஒதுங்கிக் கொள்ள கட்டில் மேலே விழுந்து விடுகிறான். கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பார்களே அது போல படுக்கையிலும் ஸ்டைலாக போஸ் கொடுக்கிறான் அர்ஜுன். ஒரு தலையணையை ரோஜா மீது தூக்கிப் போட, அவள் அதை பிடித்து அதற்கு முத்தமிட்டு அவனிடமே தூக்கிப் போடுகிறாள், அவன் அதுக்கு மேலே என்று சொல்வார்களே அது போல ரோஜா முத்தம் கொடுத்து தூக்கிப் போட்ட தலையணையை பிடித்து, தலையணைக்கு அவனும் முத்தம் கொடுக்கிறான்.. இப்படியாக அவர்களுக்குள் காதல் பாடாய் படுத்துகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”