/tamil-ie/media/media_files/uploads/2020/10/Tamil-Serial-News-Sun-TV-Roja-Serial.jpg)
ரோஜா சீரியல்
Tamil Serial News: ரோஜா சீரியலும், பூவே உனக்காக சீரியலும் ஒன்றாக இணைந்து மகா சங்கமமாக சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது.
”நீங்க என்ன தான் சொன்னீங்கன்னு பச்சையா தெரியுது” கொந்தளித்த ரியோ
ஒப்பந்த திருமணம் செய்து கொண்ட ரோஜாவும், அர்ஜுனும் காதலில் லயித்து, தற்போது ஆதர்ச தம்பதிகளாக இணைந்து வாழ்கின்றனர். இவர்களின் ரொமான்ஸை பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது. இவர்களை பிரித்து, அர்ஜூனை தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என வில்லத்தனமான பிளான்களை போட்டு வரும் அனுவிற்கு தொடர்ந்து ஏமாற்றம் தான். ஆனாலும் தனது வில்லத் தனத்திலிருந்து பின் வாங்காமல், புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் அனு.
திருமண நாளுக்கு வந்த பரிசுப் பொருட்களை பிரித்துப் பார்க்கும் ரோஜாவிற்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. மகள் ரோஜாவிற்கு அவரது அம்மா கொடுத்த பரிசுப்பொருள் ஒன்றும் அங்கிருக்கிறது. ஒரு தாய் தனது குழந்தையை தூக்கிக் கொண்டு இருப்பது போல் ஒரு அழகான பொம்மை தான் அந்த பரிசு. அதனைப் பார்த்து கண் கலங்குகிறார் ரோஜா.
இந்நிலையில் பூவே உனக்காக குடும்பத்தைச் சேர்ந்த சக்திவேல், கதிர், பூவரசி ஆகியோர் கெஸ்ட் ஹவுசில் சந்தித்துள்ளனர். புதிதாக திருமணம் ஆன கதிரும், பூவரசியும் இணைந்து குல தெய்வ கோவிலுக்கு வருவதாகக் கூறி கீர்த்தியை தேடி வந்துள்ளனர். அதனால் அன்னப்பூரணி அம்மாவின் வீட்டு கெஸ்ட் ஹவுசில் தங்கியுள்ளனர்.
‘ரிலேஷன்ஷிப்’பில் லட்சுமிமேனன்..? பிடித்த நடிகர் தனுஷ்!
செண்பகத்தின் பள்ளி பருவ நண்பர் சக்திவேல், இறந்து போன செண்பகத்தை நினைத்துக் கொண்டிருக்கும் போது வீட்டிற்குள் வரும் ரோஜாவை பார்த்து ஆச்சரியப்படுகிறார். செண்பகம் என்று ரோஜாவின் கையை சக்திவேல் பிடிக்க அதைப் பார்த்த அர்ஜுனும், ரோஜாவின் மாமியாரும் நெகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ரோஜாவிற்கு பேச்சே வரவில்லை. ஆனால் அன்னப்பூரணி அம்மாவோ, அனுவை கூப்பிட்டு இது தான் செண்பகத்தின் மகள் என்று சக்திவேலுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.
இதை எப்படி நிரூபிப்பது என தற்போது தவித்துக் கொண்டிருக்கிறார் சக்திவேல்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us