Sun TV Roja Serial, Roja Arjun, tamil serial, தமிழ் சீரியல்
Sun TV, Roja Serial : சன் டிவியின் ரோஜா சீரியல் லாக்டவுன் காலத்தில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருது. தினம் சாயங்காலம் 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை, வீட்டில் உள்ள பெண்மணிகள் யாரும் அவ்வளவா பார்க்கறதில்லை. இதில் ரோஜாவாக நடிக்கும் பிரியங்கா, அர்ஜூனாக நடிக்கும் சிபு சோரன் இவங்களை பார்க்க சில பேர் டிவி முன் உட்காருகின்றனர். கதை என்று பார்த்தால் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான பிரியமானவளே படத்தின் கதை போலத்தான். அது என்னவோ.. என்ன மாயமோ கதைக்கு என்றால் மட்டும், ஒரு வருஷ அக்ரிமெண்ட், கல்யாணம் செய்துக்காமலே பொய்யா கல்யாணம் செய்துக் கொண்ட மாதிரி வாழறது, இதெல்லாம் ஹிட்டாகி விடுகிறது.
ரோஜா சீரியலும் அப்படித்தான். அர்ஜுன், ரோஜாவை தாலிக்கட்டி, ரெஜிஸ்டர் பண்ணித்தான் கல்யாணம் செய்துக்கறான். ஆனால் ஒரு வருஷத்துக்கு புருஷன் பொண்டாட்டி மாதிரி நடிக்க மட்டும் தான். ரோஜாவும் ஆஸ்ரமத்தில் தன்னை வளர்த்த சாந்த மூர்த்தி அப்பா, சிறையில் இருந்து விடுதலை ஆகணும். அதுக்கு கிரிமினல் லாயர் அர்ஜுன் உதவி செய்யணும்னு, நடிக்க ஒப்புக்கொண்டு, அன்னபூரணி அம்மா வீட்டுக்கு மருமகளா வந்துவிடுகிறாள். ரோஜாவை அனாதை பெண் என்று அன்னபூரணி அம்மாவுக்கு பிடிக்கலை. இருந்தாலும், மகன் கல்யாணம் செய்துகொண்டு வந்துவிட்டான், என்று மாமியார் கல்பனா மட்டும் ஆதரவு தர்றாங்க.
Advertisment
Advertisements
இப்போது தான் முக்கியமான சீன். வேலைக்கார சுமதி அக்கா, பொன்னி அம்மன் கோயிலுக்கு போயிட்டு வந்தேன். இந்த குங்குமத்தை அர்ஜுன் நெத்தியில் வச்சு விடுங்கன்னு கல்பனாகிட்டே சொல்றாங்க. சுமதிக்கா, நான் கல்யாணம் செய்துக்கொண்டு இந்த வீட்டுக்கு வந்த உடனே, அத்தை அவங்க மகனை என் பொறுப்பில் தானே விட்டாங்க. அது மாதிரி தான் நானும். இனி அர்ஜுன் வேலை எல்லாம் அவன் பொண்டாட்டி, ரோஜா தான் செய்யணும். அதனால, குங்குமத்தை அர்ஜுனுக்கு, அவளையே வச்சுவிட சொல்லுங்கன்னு சொல்றாங்க கல்பனா.
ரோஜா உயரம் கம்மி. அர்ஜுன் செம உயரம். எக்கி எக்கி அர்ஜுன் நெத்தியில் போட்டு வைக்கப் பார்க்கிறாள் ரோஜா. எட்டவே இல்லை. இதை எல்லாரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்க, அர்ஜுன் மண்ணு மாதிரி நிக்கறான். வேலைக்காரி இரும்மா. நான் போயி ஸ்டூல் எடுத்துட்டு வரேன்னு சொல்லி கிளம்பும் போது, விழித்துக்கொண்ட அர்ஜுன், அதெல்லாம் ஒண்ணும் வேணாம். இப்போ என்ன இந்த குங்குமத்தை ரோஜா என் நெத்தியில வைக்கணும் அவ்ளோ தானேன்னு கேட்டுட்டு, அலேக்கா தூக்கிக்கறான் ரோஜாவை. சும்மா பொண்டாட்டியா நடிக்க வந்த பெண்ணை சட்டம் தெரிஞ்ச கிரிமினல் லாயர், இப்படி அவளின் சம்மதம் இல்லாமல் தூக்கிக்கலாமா? இந்த சட்டத்திட்டம் எல்லாம் கிளுகிளுப்பு என்று வரும்போது தப்பில்லை. அப்படித்தானே?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”