Sun TV Roja Serial : ரோஜா சீரியலில் கல்யாணமே பிடிக்காத அர்ஜுன், தனக்கு கிளைண்டா வந்த ரோஜாவை ஒரு வருஷ கான்டிராக்ட் போட்டு கல்யாணம் செய்துக்கறான். ஒரிஜினலா கல்யாணம் ஆகாத அர்ஜுனுக்கு, நடந்த இந்த பொய் கல்யாணத்தில் மல்லி பூ வாசனை பிடிக்காதாம். தலை நிறைய மல்லிகைப் பூவோடு புது மணப்பெண்ணாக ரோஜா படுக்கையறைக்கு வருகிறாள். ரோஜா எனக்கு பூ வாசனை பிடிக்காதுன்னு சொல்ல, சரி சார்... இதை நான் டஸ்பின்ல போட்டுடறேன்னு போகிறாள் ரோஜா. வேணாம் வேணாம் அதை கண்டு பிடிச்சுருவாங்க. டாய்லெட்டில் போட்டு ஃபிளஷ் பண்ணிருன்னு சொல்றான். அவளும் அவன் பேச்சைத் தட்டாமல் அப்படியே செய்து விடுகிறாள்.
உண்மையை மறைக்க விரும்பவில்லை: காதலிப்பதை ஒப்புக் கொண்ட டாப்ஸி
சரி.. பூ பிடிக்கலை, நடிக்கறாங்க. இப்படி வச்சுக்கிட்டாலும், பொண்டாட்டி ரோஜா, புருஷனுக்கு குங்குமம் வைக்க எக்கி எக்கி நிற்கிறாள். அப்போது பொண்டாட்டியா நடிக்க வந்தவள் தானே என்று கூட பார்க்காமல், குனிந்து தனது நெற்றியை காண்பிக்காமல் ரோஜாவை தூக்கி வச்சுக்கிட்டு பொட்டு வைன்னு சொல்றான். இப்படியான போன குடும்பத்துல ரோஜா வலிய வந்து அர்ஜுனை கட்டிக்கொண்ட அந்த தருணம்... எதுக்காக ரோஜா அர்ஜுனை கட்டிப்பிடிச்சுகிட்டா? ரோஜா ஆஸ்ரமத்தில் வளர்ந்தவள். அவள் அம்மாவைத் தேடி கண்டு பிடிச்சு தர்றேன்னு அர்ஜுன் சொல்லி இருக்கான். அன்னையர் தினத்தில் உங்க அம்மா போட்டோவை உனக்கு பரிசா தர்றேன் ரோஜான்னு அர்ஜுன் சொல்றான். ரோஜாவும் ஆசையா எதிர்பார்த்து இருக்க, ரோஜாவின் அம்மா போட்டோவோடு வருகிறான் அர்ஜுன்.
தனது தமிழ் பாடலை பாடிக் கொண்டே வெளிநாட்டில் ஷ்ரேயா அசத்தல் நடனம்
இந்த நெகிழ்ச்சியில், அர்ஜுனை கட்டிப்பிடிச்சு அவன் மார்பில் முகம் வைத்து ஆனந்த கண்ணீர் விடுகிறாள். இத்தனைக்கும் அவன் கொண்டு வந்து கொடுத்தது, ரோஜாவுக்கு அம்மா வேஷம் போட்டு வரைந்த படம். இது எப்படி இருக்கு? இதுக்கு போயி உணர்ச்சி வசப்பட்டு கட்டிப் பிடிச்சுகிட்டா. கன்னத்தில் முத்தம் வைக்கிறாள். அத்தை கல்பனா இதை பார்த்து வெட்கப்படறாங்க. எல்லாம் சீனுக்குத்தானே என்ன பண்றது..!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”