Sun TV Seriala : ரன் சீரியலில் ரம்யா, ருத்ரன் விரிச்ச வலையில் விழுந்துட்டா. அவனும் தனது அம்மா என்று ஒரு செட்டப் அம்மாவை பாண்டிச்சேரியில் தங்க வச்சு, ரம்யாவை அங்கே அழைச்சுட்டு போறான். அவளும், ருத்ரன் அம்மாவை பார்த்துட்டு வரேன்னு அக்கா திவ்யாவிடம் சொல்லிட்டு கிளம்பறா. ருத்ரன் வேண்டும் என்றே தான் அவளை பாண்டிச்சேரிக்கு அழைச்சுட்டு போகிறான். இந்த மரமண்டைக்கு அது புரியலை.
பாண்டியன் ஸ்டோர்ஸ்: முடிவ கொஞ்சம் மாத்திக்கலாமே தனம்?
நினைச்ச மாதிரி கார் ரிப்பேர்னு ராத்திரி கிளம்பும் போது ருத்ரன் சொல்றான். சரி வேற வழி இல்லை தங்கிட்டு போகலாம்னு சொல்லி அக்காவுக்கு போன் செய்யறா ரம்யா. திவ்யா ராத்திரி நேரத்துல இப்படி தங்கலாமாடி என்று புலம்ப, தங்கினா என்னக்கா தப்பு? கல்யாணம் செய்துக்க போறவர் தானே என்று சொல்கிறாள். இப்படித்தான் பல பேர் கல்யாணம் தான் செய்துக்க போறோமேன்னு கல்யாணத்துக்கு முன்பே சேர்ந்து வாழவும் ஆரம்பிச்சுடறாங்க.
அப்பா அம்மா ஸ்தானத்தில் இருந்து பேசறேன் ரம்யா, உனக்கு புரியுதா புரியலையான்னு கேட்கிறாள் திவ்யா. அக்கா நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை. எனக்கு ஜாக்கிரதையா இருந்துக்க தெரியும்க்கா. நீ வீணா சந்தேகப் படாதே, என்று சொல்லி போனை வச்சுட்டு படுத்துட்டா ரம்யா. ருத்ரன் திட்டமிட்டு அம்மாவா நடிக்க வந்த பெண்ணிடம் பாலில் தூக்க மாத்திரை கலக்க சொல்லி ருத்ராவை அடைய திட்டம் போடுகிறான்.
க்யூட் ராஷ்மிகா மந்தனா, யோகா காதலி ரகுல் ப்ரீத் – படத் தொகுப்பு
அந்த பெண்மணி நல்லவங்களா இருக்கவே, மாத்திரையை ருத்ரன் பாலில் கலந்துடறாங்க. அவன் விடிய விடிய நல்லா தூங்கினதால் ரம்யா பாதுகாப்பா வீடு வந்து சேர்கிறாள். கல்யாணம் செய்துக்க போறவங்கதானே என்று தவறு செய்யும் இளைஞர்கள் இப்போது அதிகமாகி உள்ளனர். ரம்யாவை ருத்ரன் அடைந்தே இருந்தால் கூட அவளைப் பொறுத்தவரைக்கும் தன்னை கல்யாணம் செய்துக்க போறவன்தானேன்னு அசால்ட்டா நினைக்கும் காலக்கட்டம்தான் இது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”