Vijay TV Serial : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் எடுத்த முடிவு எடுத்ததுதான்னு பிடிவாதமா நிற்கிறாள் தனம். பார்க்க போனால் அவள் தீர்மானமாக நிற்பதுதான் சரியோ என்றும் தோன்றுகிறது. ரஜினி நடித்த படிக்காதவன் படத்தில், தம்பிங்க தான் நமக்கு குழந்தைங்க என்று அண்ணன் சிவாஜி முடிவு பண்ணி மனைவியிடமும் சொல்லிடுவார். ஆனால், மனைவி இதுக்கு ஒப்புக்காமல் கடைசியில் ரஜினி மற்றும் இரு தம்பிகளை வீட்டை விட்டு துரத்தி விடுவார். இறுதியில் தம்பிகள் அண்ணன் சிவாஜியை சந்திக்கும்போது அவர் குழந்தைகள் இல்லாமல் இருப்பதை அறிந்து நெகிழ்ந்து போவார்கள்.
அதே போல... கணவன் மூர்த்தி தம்பிங்க வளரும் வரை நமக்கு குழந்தைங்க வேண்டாம் என்று சொன்ன சொல்லுக்கு கட்டுப்பட்டு தனம் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்கிற ஆசையை மனதில் இருந்து தூக்கி எரிந்து விடுகிறாள். உண்மையை தெரிஞ்சுக்கிட்ட கதிர் உங்களுக்கு என்று ஒரு குழந்தை வேண்டும் என்று சொல்ல, தனத்துக்கு மனம் ஒப்பவில்லை. இவங்கதானே என் பிள்ளைகள். அப்படி வளர்த்த பிறகு இன்னொரு குழந்தையா என்று மனம் உண்மையை ஏற்க மறுக்கிறது.
Advertisment
Advertisements
என்னக்கா ஒரேயடியா பிடிவாதமா இருக்கீக. பின்னால ரொம்ப வருத்தப்படுவிய என்று முல்லை சொல்வது தான் உண்மை. மூர்த்தி கூட மனைவிக்கு துரோகம் செய்துவிட்டோமோ என்று வருத்தப்பட்டு, அவங்க பேச்சை இனி மீற முடியும்னு தோணலப்பா என்று தனத்திடம் சொன்னாலும் தனம் பிடிவாதமாக இருப்பது சீரியலை விரும்பிப் பார்க்கும் மக்களுக்கு என்னவோ போலத்தான் இருக்குது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதை எப்படி போகுமோ. தனத்துக்கு குழந்தையே இல்லாமல் செய்து விடுவார்களோ? தம்பிகள் அண்ணன் அண்ணியை மதிக்காமல் தங்கள் குடும்பம் என்று சுயநலம் பார்க்கக் ஆரம்பித்து விடுவார்களோ என்று நெகட்டிவாக நினைக்க ஆரம்பிக்க, தனத்துக்கு குழந்தை வேண்டுமென்கிற விஷயம் பூதாகரமாக கிளம்பி இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பார்ப்பவர்கள் மென்மையான மனத்துக்காரர்கள். அவர்களுக்கு ஏற்றபடி கதையை கொண்டு போகும் இயக்குனர் இதை பற்றி சிந்திக்காமலா இருப்பார்...டோன்ட் வொரி...!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"