அஜித்துக்கு ’தல’ன்னு பேர் வச்சது ஒரு ஸ்டண்ட் கலைஞர்: நடிகர் விவேக் கலகல….!

”இந்த விழாவின் மூலமாக நான் தேங்க் பண்ண வேண்டியது யாருக்கு தெரியுமா? இங்கே இருக்கும் ஸ்டண்ட் கலைஞர்களின் மனைவி, தாய், மகள்கள் ஆகியோருக்குத்தான்.”

Stunt Union Function, Sun TV Vivek Speech
Stunt Union Function, Sun TV Vivek Speech

Sun TV Show: ஸ்டண்ட் யூனியன் தனது 50 வது ஆண்டுவிழாவைக் கொண்டாடியது. இந்த கொண்டாட்டத்தை சன் டிவி அப்போது ஒளிபரப்பு செய்தாலும், இந்த கோவிட் 19 தொற்று லாக்டவுன் காலத்தில் அந்த நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்தது. நடிகர் நடிகைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளோடு நிகழ்ச்சி துவங்கியது.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது? எதிர்பார்ப்பில் மாணவர்கள்

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விவேக், எல்லாருக்கும் சிகரம் வைத்த மாதிரி, சூப்பர் ஸ்டார் ரஜினி சார் வந்து இருக்காங்க. தான் மட்டும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைக்காமல், எல்லாரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக இருக்கும் சிவகுமார் சார் வந்து இருக்காங்க. அவருக்கு தம்பியான சூர்யா சார் வந்து இருக்காங்க. தம்பி கார்த்தி வந்து இருக்காரு. கிரேட்டஸ்ட் நடிகர் சிவாஜி சார் அவங்க பேரன் வந்து இருக்காரு. என்றெல்லாம் வந்து இருக்கும் நடிகர்களைக் குறித்து பேச ஆரம்பித்தார்.

உண்மையான ஆக்ஷன் ஹீரோஸ் யாருன்னா அது ஸ்டண்ட் கலைஞர்கள் தான் என்று சொன்னார். இந்த விழாவின் மூலமாக நான் தேங்க் பண்ண வேண்டியது யாருக்கு தெரியுமா? இங்கே இருக்கும் ஸ்டண்ட் கலைஞர்களின் மனைவி, தாய், மகள்கள் ஆகியோருக்குத்தான். ஒரு மனைவி தனது கணவனை ஷூட்டிங் அனுப்பிவிட்டு, திரும்ப வருவாரோ மாட்டோரோ என்று கையில் தாலியைப் பிடித்துக்கொண்டு காத்து இருப்பது என்பது எத்தனை பெரிய விஷயம். அவங்களுக்கும், பெற்ற தாய் மற்றும் அவர் உடன் பிறந்த சகோதரிகள் இவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்றார்.

சிம்பு குரலில் சூப்பர் ஸ்டார் ஆன்தெம்: ரசிகர்களிடம் தெறி ஹிட்!

இந்த 50 வருட காலத்தில் பியூ சின்னப்பாவில் ஆரம்பித்து, எம்ஜிஆர் சார், நடிகர் திலகம், இப்போது இருக்கும் ரஜினி சார், தல அஜீத் என்று சொல்ல, ரசிகர்களின் கைத்தட்டல் ஓயவில்லை. டைமாச்சு.. இன்னும் பேசணும் என்று சொல்லியும் ரசிகர்களின் சத்தம் வெகு நேரம் ஓயவில்லை. அடுத்து தளபதி விஜய் என்று சொன்னார் அப்போதும் கூச்சல். பின்னர் விவேக் சொன்னார். தல அஜித்னு சொன்ன உடனே அப்படி சத்தம் போட்டீங்களே. தலக்கு தலன்னுபேர் வச்சது யாரு? ஒரு ஸ்டண்ட் கலைஞன் தான். அவர் தான் மகாநதி சங்கர் என்று சொன்னார்.

ஸ்டண்ட் கலைஞர்கள் கிட்டே என்னை போல காமெடியன் உஷாரா இருக்கணும். பாம் வைப்பாங்க.. அதில் நானும் வடிவேலுவும் கருகிப்போயி இருப்போம். வாயில புகை வரும். பின் பக்கம் ஏரியாவை கிழிச்சு விட்டு நிக்க வைப்பீங்க. உங்ககிட்டே நாங்க தகராறு செய்தால், போலி பாமுக்கு பதில் நிஜ பாமை வச்சுருவீங்க என்று தமாஷாக சொன்னார் விவேக்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial news sun tv stunt union function vivek thala ajith

Next Story
சிம்பு குரலில் சூப்பர் ஸ்டார் ஆன்தெம்: ரசிகர்களிடம் தெறி ஹிட்!Friendship movie, Superstar Anthem, Simbu
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com