Tamil Serial News: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘திருமணம்’ சீரியலில் முன்னணி கதாபாத்திரங்களாக நடிக்கும் சந்தோஷ் – ஜனனி ரீலில் மட்டுமல்ல, ரியல் லைஃபிலும் இணைய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்தளவுக்கு இருவருக்கும் செம கெமிஸ்ட்ரி!
சந்தோஷின் தம்பி நவீனும், ஜனனியின் தங்கை அனிதாவும் காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்கள். அனிதா வீட்டில் இதனை ஏற்றுக் கொள்ளாத நிலையில், சந்தோஷே முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்தான். பின்னர் அந்த திருமணத்தை இரு வீட்டாரும் ஏற்றுக் கொண்டார்கள். தான் சொன்னதையும் மீறி, தங்கை அனிதா நவீனை திருமணம் செய்துக் கொண்டதால் ஆரம்பத்தில் சற்று கோபமாக இருந்தாள் ஜனனி. இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்ட மாயா, ஜனனியை பற்றி இல்லாததையும் பொல்லாததையும் அனிதாவிடம் கூறி உசுப்பேத்தினாள். இதற்கிடையே கொரோனா தொற்றால், சீரியல் படபிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் தற்போது 3 மாதங்கள் கழித்து கட்டுப்பாடுகளுடன் சீரியல் படபிடிப்புகள் தொடங்கியுள்ளன. ஆகையால் புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
Advertisment
Advertisements
சீரியலின் வில்லியான மாயா ஜனனிக்கு போன் செய்கிறாள். "என்ன ஜனனி, ஹலோன்னு உன் குரல் கூட காணோம். நீ பேசக்கூட முடியாம வாயடைச்சுப் போய் நிக்கிறேன்னு எனக்கு நல்லா தெரியுது. நான் அனுப்புன வீடியோவை நீ பார்த்துட்டேன்னு நினைக்கிறேன். நீ ஒரு கணக்கு போட்ட. இந்த வீட்டுக்கு நீ வரலைன்னா, அப்படியே எல்லாரும் ஆடி போயிடுவாங்கன்னு நெனச்ச இல்ல. முக்கியமா சந்தோஷ் ரொம்ப மனசு உடைஞ்சு போய், ஒண்ணுக்கும் உதவாம மாறிடுவான்னு நினைச்ச இல்ல. இப்ப நீ போட்ட கணக்கு மொத்தமும் தப்பா ஆயிடுச்சு. பாத்தல்ல வர்ஷினியும் உன் புருஷனும் அடிக்கிற கூத்த. இப்போ எப்படி இருக்கு? வர்ஷினி ரொம்ப நல்ல பொண்ணு. அழகு, நாகரிகம், வசதின்னு எங்க குடும்பத்துக்கு ஏத்தவ. அதனால சந்தோஷுக்கு வர்ஷினிய கல்யாணம் பண்ணி வச்சா என்னன்னு மாமாவுக்கு இப்ப தோனி இருக்கும்.
மாமாவுக்கு தோணினது விஷயம் இல்லை. அது சந்தோஷுக்கும் தோனி இருக்கு. அதனால தான் வர்ஷினியோட பிறந்தநாள இங்க கொண்டாடணும்ன்னு அடம் பிடிச்சு சந்தோஷ் கொண்டாடினான். அவங்களுக்குள்ள இருக்க காதல் எங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. கூடிய சீக்கிரமே பர்த்டே வீடியோ அனுப்புன மாதிரி, கல்யாண வீடியோவையும் அனுப்பி வைக்கிறேன்” என ஜனனியிடம் பேசுகிறாள்.
அதோடு சந்தோஷிடம் ப்ரொபோஸ் பண்ண சொல்லி, வர்ஷினியை அனுப்பி வைக்கிறாள். அதற்கு வர்ஷினி பதிலேதும் கூறாமல் வீடு திரும்பி விட்டாள். என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் துடித்துப் போன மாயா, வர்ஷினி வீட்டிற்கு செல்கிறாள். என்ன நடந்தது என துருவித் துருவி விசாரிக்கிறாள். ”இதெல்லாம் சரியா வராது மேடம். நம்ம நினைக்கிற மாதிரி இல்ல. சந்தோஷ் மனசில ஜனனி தான் இருக்காங்க. அவங்கள பத்தி பேச்சு எடுத்ததற்கு பொரிஞ்சு தள்ளிட்டாரு. அப்படி இருக்கும் போது நான் எப்படி ப்ரபோஸ் பண்றது? நீங்க சொன்ன மாதிரி நான் செஞ்சிருந்தா, கண்டிப்பா எங்க ரெண்டு பேருக்கும் இடையேயான பிரண்ட்ஷிப் கெட்டுப் போயிருக்கும். அதனால என்னால முடியாது” என்கிறாள் வர்ஷினி.
பின்னர் மாயாவின் அறைக்கதவை தட்டி, ”ஜனனிக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் பிரச்சனை இருக்கிறது, என்பதை அப்பாகிட்ட நீங்க ஏன் சொன்னிங்க. வேற ஏதாச்சும்ன்னா பரவால்ல. இத அப்பா எப்படித் தாங்குவார்?” என்கிறான் சந்தோஷ். ”மாமாவுக்கு எப்படி தெரிஞ்சதுன்னு எனக்கு தெரியாது. இந்த வீட்ல நல்லது நடந்தா அதுக்குக் காரணம் ஜனனி, கெட்டது நடந்தா அதுக்கு மாயவா?” என சந்தோஷிடம் சண்டை போடுகிறாள் மாயா.
மாயாவின் சதித் திட்டங்களை ஜனனி எப்படி முறியடிப்பாள் ஜனனி? பொறுத்திருந்து பார்ப்போம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”