Tamil Serial News: சின்னத்திரை ரசிகர்களுக்கு கண்ணாம்மாவை தெரியாமல் இருக்க முடியாது. கடந்த சில நாட்களாக டிவி-யிலும், இணையத்திலும் அவர் தான் வைரல். விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலின், ஹீரோயின் கண்ணம்மாவை தான் சொல்கிறோம்.
உருளைக்கிழங்குக்கு அக்கப்போரா! என்ன கேப்டன் இதெல்லாம்? பிக் பாஸ் 4 விமர்சனம்
கண்ணம்மாவின் நடத்தையை சந்தேகித்து, அவள் வயிற்றில் வளர்வது தனது குழந்தை இல்லை எனும் முடிவுக்கு வந்து விடுகிறான் பாரதி. ஆனால் இதை வெளியில் சொல்ல முடியாமல், கண்ணம்மாவுடன் பேசுவதை தவிர்த்து விடுகிறான். கண்ணம்மாவுக்கும், குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது எனத் தெரியாமல் குழம்பிப் போகிறார்கள். அப்போது ‘கண்ணம்மா சுமக்குறது என்னோட குழந்தை இல்ல, அது வேற ஒருத்தனோடது, இவ ஒழுக்கங்கெட்டவ’ என்கிறான் பாரதி. இதற்கு பாரதியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கண்ணம்மாவுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். ஆனால் கண்ணம்மாவோ தான் இருக்கும் இடத்தை யாருக்கும் தெரியப்படுத்தாமல், பெட்ரோல் பங்கில் வேலை செய்து, தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார்.
வெண்பா கண்ணாவைப் பற்றி இல்லாததையும் பற்றி, அவன் மனதில் வெறுப்பை விதைக்கிறாள். இதனால் முழுநேர குடிகாரனாகி விடுகிறான் பாரதி. குடி போதையில் இருக்கும் பாரதி மருத்துவமனையில் ஆபரேஷன் செய்யப் போக, அதனை பார்த்தவர்கள் பாரதியை தடுக்க, பதிலுக்கு அவர் சண்டை போட, அதனை வீடியோ எடுத்து டிவியில் போட்டு அசிங்கப்படுத்தி விடுகிறார்கள்.
இந்த செய்தியைப் பார்த்த கண்ணம்மா இவன் இன்னும் திருந்தவில்லை என்று திட்டுகிறாள். இதற்கிடையே போதையில் இருந்த வெண்பாவின் சித்தப்பா கண் விழித்தது, பாரதிக்கு போன் செய்து உண்மையை சொல்ல முயல்கிறார். இதைப் பார்த்த வெண்பா ஃபோன் ஒயரை துண்டித்து விடுகிறாள். சித்தப்பாவை மிரட்டி விட்டு, மீண்டும் ஊசி போட்டு விடுகிறாள்.
அதோடு பாரதியின் அம்மா சௌந்தர்யாவிடம், கண்ணம்மாவை வருணுடன் இணைத்து தப்பாக பேசுகிறார். இதனால் தான் பாரதி சந்தேகப்படுகிறார் என்று கூற, அதைக் கேட்டு சௌந்தர்யாவிற்கு கோபம் வருகிறது. அடிக்க கை ஓங்குகிறார். அறைவாங்காமல் தப்பித்து விடுகிறாள் வெண்பா.
’என்ன பத்தி பேசி ஃபேமஸ் ஆகணும்ன்னு ட்ரை பண்றாரு’: கோபமானா அனிதா
பாரதியின் சந்தேகத்தைத் தீர்த்து வைக்க விரும்பிய மாமியார் செளந்தர்யா, வருணைப் பார்த்து பேசி உண்மையை சொல்கிறார். அதற்கு, என்னை அண்ணன் போல நினைத்து தான் கண்ணம்மா பழகினாள் என்று கூறுகிறார் வருண். இதற்கிடையே, வெண்பா செட் பண்ணி வைத்த பாபு கண்ணம்மாவை கொலை செய்ய தேடி வருகிறான். ஏன் துரத்துகிறார்கள் என்று தெரியாத கண்ணம்மா ஒரு கடையில் அடைக்கலமாகிறாள். அடுத்து என்ன நடக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”