Tamil TV News: விஜய் டிவியில் 'குக்கு வித் கோமாளி' ரியாலிட்டி ஷோ, கோவிட் 19 தொற்று லாக்டவுன் காரணமாக மறு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கோமாளியாக கலந்துக்கொண்ட மணிமேகலை, ரம்யா பாண்டியனை காண்பித்து புகழ் விட்டாலும், இவங்க விட மாட்டாங்க போலிருக்கேன்னு சொன்னார்.
தமிழ் கற்கும் ராஷி கண்ணா, குட்டி ஸ்ருதி: படத் தொகுப்பு
அப்புறம் என்னவாம்... மணிமேகலை வியர்க்க விறுவிறுக்க புலாவ் கிளறிக்கொண்டு இருக்க, யதேச்சையாக அந்த பக்கம் போன புகழை அழைத்து, புலாவ் டேஸ்ட் எப்படி வந்து இருக்குனு பார்த்து சொல்லுங்க என்று சொல்கிறார்.. அதுவும் மணிமேகலையை கரண்டியில் எடுத்து புகழுக்கு கொடுக்க சொல்லி, எப்படி இருக்கும் நம்ம மணிமேகலைக்கு? முதலில் ஜாலியாக எடுத்துக்கொண்ட மணிமேகலை, இவன் ராசி இல்லாதவனாச்சே என்று சொல்லிக்கொண்டு, சரி பரவாயில்லை என்று கரண்டியில் கொஞ்சம் எடுத்து புகழுக்குத் தருகிறார்.
புகழ் வாய் சுட்டதோ, கை சுட்டதோன்னு சுடச்சுட சாப்பிட்டு விட்டு, நல்லாருக்கு என்று சொன்னார். அப்படியா வெந்து இருக்கான்னு மறுபடியும் கேட்டார் ரம்யா பாண்டியன். வெந்து இருக்குன்னு சொன்னார் புகழ். அப்போது தான் கோபம் வந்துவிட்டது மணிமேகலைக்கு. நான் இங்கே கஷ்டப்பட்டு செய்துகிட்டு இருக்கேன். டேஸ்ட் பார்க்க அவனை கூப்பிடறீங்களா என்று கோபித்துக் கொண்டார். இல்லை.. இல்லை.. இனிமே கூப்பிட மாட்டேன் என்று சொன்னவர், அதான் இப்போ கூப்பிட்டு கேட்டுட்டேனே என்று மறுபடியும் கோபத்தை கிளறினார். புகழ் விட்டாலும் இவங்க விட மாட்டாங்க போலிருக்கேன்னு காமிராவைப் பார்த்து சொன்னார் மணிமேகலை.
யாருமில்லா கோவிலுக்கு விசிட் அடித்த யானைகள் -மருதமலையில் ஓவர் அட்டகாசம்
எல்லா பொடியும் போட்டுட்டோம் மூக்கு பொடியைத் தவிர என்று பாலா மும்முரமாக சமையலுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக்கொண்டு இருந்த வனிதாவிடம் சொல்லிக்கொண்டு இருந்தார். கொஞ்ச நேரத்துக்குள்ளே ரேகாவிடம் போயி, என்ன சத்தம் இந்த நேரம் பாடலை பாடிக்கொண்டே அவருடன் மாவாட்டி கொண்டு இருந்தார். உடனே பாலா என்று வனிதா விஜயகுமார் பெரும் குரலில் கூப்பிட ஓடிச் சென்றார். இப்படியாக கலாட்டாவுடன் நடந்த குக்கு வித் கோமாளி கிராண்ட் ஃபினாலே ஷோவில் டைட்டில் வின்னர் வனிதா விஜய்குமார் தான்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”