சோஃபாவில் உட்கார்ந்தபடியே டிடி-யின் அசத்தல் நடனம்!

15 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக மிளிர்கிறார். விஜய் டிவி-யின் விருது வழங்கும் நிகழ்ச்சி உட்பட ஏனைய விருது நிகழ்ச்சிகளையும், பிரபலங்களின் நேர்க்காணல்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

15 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக மிளிர்கிறார். விஜய் டிவி-யின் விருது வழங்கும் நிகழ்ச்சி உட்பட ஏனைய விருது நிகழ்ச்சிகளையும், பிரபலங்களின் நேர்க்காணல்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay TV DD, Tamil TV instagram viral video

Vijay TV DD

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. நடிகைகளுக்கு இணையான ரசிகர்களை வைத்திருக்கும் டிடி, அவ்வப்போது தனது வித்தியாசமான புகைப்படங்களால் சமூக வலைதளங்களில் வைரலாவார்.

’நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்

Advertisment

க்யூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சால் கவரப்பட்ட ரசிகர்கள் இவரை செல்லமாக டிடி என அழைக்கின்றனர். ’ஜோடி நம்பர் 1’, ‘ஹோம் ஸ்வீட் ஹோம்’, ‘காஃபி வித் டிடி’ என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 15 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக மிளிர்கிறார். விஜய் டிவி-யின் விருது வழங்கும் நிகழ்ச்சி உட்பட ஏனைய விருது நிகழ்ச்சிகளையும், பிரபலங்களின் நேர்க்காணல்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

ரூ. 100 போதும் அக்கவுண்ட் ஓபன் பண்ணுங்கள்.. எஸ்பிஐ-யில் வட்டி கிடைக்கும்!

Advertisment
Advertisements

இந்நிலையில் கொரோனா லாக்டவுன் சமயத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஓய்வில் இருந்தார். இதற்கிடையே தற்போது சோஃபாவில் அமர்ந்தபடி கைகளை அசைத்து, அதற்கேற்றவாறு முக பாவனைகளைக் காட்டி அழகாக, சோஃபா டான்ஸ் ஆடியிருக்கிறார் டிடி. மலையாளிகளின் வீடுகளில் இந்த பாடல் தான் அதிகம் ஒலிக்கும் எனக் குறிப்பிட்டுள்ள டிடி, அந்தப் பாடலுக்கு தான் நடனமாடியிருக்கிறார். இதனை டிடி-யின் அக்கா பிரியதர்ஷினி கொரியோகிராஃப் செய்தாராம். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tv Show Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: