Varalakshmi Sarathkumar: கொரோனா வைரஸ் காரனமாக அனைத்து துறைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் சினிமா துறை மிகப்பெரிய இழப்புகளை சந்தித்துள்ளது. வைரஸின் தொற்று குறைந்து, எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என யாருக்கும் தெரியவில்லை.
மொபைல் ஃபோன் அவசியம்.. பிரபல வங்கியின் அதிரடி அறிவிப்பு!
இதனால் பாலிவுட்டைப் போல், தமிழ் படங்களும் ஆன்லைனில் வெளியீட்டை தொடங்கியுள்ளன. ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷின் ‘பென்குயின்’ ஆகியப் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகின. இதைத் தொடர்ந்து, நடிகையருக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் அனைத்தும், தற்போது, ‘ஆன்லைன்’ தளத்தை நோக்கி படையெடுத்து வருகின்றன. இதில் வரலட்சுமி சரத்குமார் நடித்த, டேனி படம், ஆகஸ்ட் 1-ம் தேதி ‘ஜீ 5’ தளத்தில் வெளியாக உள்ளது.
பள்ளிகள் திறப்பு எப்போது? பெற்றோர் கருத்தை கேட்கும் மத்திய அரசு
இது குறித்து பேசிய வரலட்சுமி, “டேனி படத்தில், கொலையை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நானும், எனக்கு துணையாக, டேனி என்ற நாயும் நடிக்கிறது. இங்கு தான், இன்னாருக்கு முக்கியத்துவம் உள்ள கதை என, பார்க்கிறீர்கள். ஆனால், வெளிநாடுகளில் அப்படியில்லை. கதைக்கு தான் முக்கியத்துவம் தருகின்றனர். ‘சேவ்சக்தி’ அமைப்பு மூலம், என்னால் முடிந்த பணிகளை செய்கிறேன். நான் ஏற்கனவே, குறைவான சம்பளம் தான் வாங்குகிறேன். கொரோனாவுக்காக, தனியே சம்பளத்தை குறைக்க வேண்டியதில்லை. நிச்சயம் அரசியலுக்கு வருவேன். ஆனால் இப்போதைக்கு இல்லை. அப்பா கட்சியிலும் சேர மாட்டேன்” என்றார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Varalakshmi sarathkumar political entry danny zee 5 release
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!