Mahabharatham Serial: விஜய் டிவி-யில் மகாபாரதம் சீரியல் தினமும் 11:30 மணிக்கு ஆரம்பித்து 12:30 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது மகாபாரத போர் துவங்கும் எபிசோட் ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணன் உறங்கிக்கொண்டு இருக்க துரியோதனனும், அர்ச்சுனனும் கண்ணனை பார்க்க வருகின்றனர்.
இதில் முதலில் வரும் துரியோதனன் கண்ணன் தலைப்பகுதியில் நிற்கிறான். அடுத்து வந்த அர்ச்சுனன் கண்ணனின் கால் பகுதியில் நிற்கிறான். கண்ணன் கண் விழித்ததும் தன்னை பார்ப்பான் என்று அர்ச்சுனனுக்குள் எண்ணம். முதலில் வந்தவன் தான் தானே.. கண்ணன் நீதிப்படி நடப்பவனாயிற்றே தனது கோரிக்கையைத்தான் கண்ணன் முதலில் கேட்பான் என்று, துரியோதனனுக்கு எண்ணம். கிருஷ்ணர் கண்விழித்தார், முதலில் கால் மாட்டில் நின்ற அர்ச்சுனன் கண்ணில் பட்டான். என்ன வேண்டும் என்று கண்ணன் கேட்க, நாந்தான் முதலில் வந்தேன் கண்ணா.. என்னிடமே நீ என்ன வேண்டும் என்று முதலில் கேட்க வேண்டும் என்று கூறுகிறான்.
Advertisment
Advertisements
முதலில் கண்ணில் பட வேண்டும் என்று எனது கால் பகுதியில் நின்றவன் அர்ச்சுனன். ஆதலால் அவனது கோரிக்கைக்கே முதலிடம் என்று சொல்கிறான் கண்ணன். இது தவறான செயல் இல்லையா கண்ணா. மக்கள் உன்னை தூற்ற மாட்டார்களா என்று கேட்கிறான் துரியோதனன் கோபமாக. நான் வெண்ணையைத் திருடி தின்றபோதே மக்கள் என்னை தூற்றவில்லை, போற்றவே செய்தார்கள். என்ன வேண்டும் நீ கேள் அர்ச்சுனா என்று அர்ச்சுனனை கேட்க வைத்தவனும் கண்ணன். அர்ச்சுனனின் சேனைக்கு செல்வேன் எதுவும் ஆயுதம் ஏந்த மாட்டேன் என்று சொன்னதும் கண்ணன். போர்க்களத்தில் சூழ்ச்சியை கையாண்டு கர்ணன், பீஷ்மர் நாளை கொல்லப்படுவார்கள் என்று நாள் குறித்ததும் கண்ணன். இப்படி ஆடுவதும் ஆட்டுவிப்பவனும் கண்ணனாகவே இருக்கிறான்.
திரெளவுபதியை சுயம் வரத்தில் அர்ச்சுனன் வெல்ல வேண்டும் என்று கர்ணனனை அவமதித்து பேச வைத்ததும் கண்ணன். கடைசியில் கர்ணன் பெற்ற புண்ணியம் அனைத்தையும் தாரை வார்த்து கேட்டதும் கர்ணன். இப்படி அதர்மம் அழிய வேண்டும் என்று எல்லாமுமாக பாண்டவர்களுக்கு இருந்து சாதித்து கொடுத்தவன் கண்ணன் தானே. போர்க்களத்தில் அவன் ஆடும் ஆட்டம் டிவி சீரியலில் என்றாலும் காணக்காண ஆனந்தம் தான்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”