Vijay TV Mouna Raagam Serial: இசை மற்றும் குடும்ப கதையை பின்னணியாகக் கொண்ட தொடர் மெளனராகம். விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், இந்த சீரியல் வங்காளி மொழி தொடரின் தழுவல். இந்த தொடரில் கிருத்திகா, ராஜிவ், சிப்பி ரஞ்சித் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
ரஜினிக்கு காத்திராமல் பாஜக.வில் இணைந்தது ஏன்? அண்ணாமலை விளக்கம்
தன் தந்தை யார் என்று தெரியாமல் இருப்பதால் சக்திக்கு பல அவமானங்கள் ஏற்படுகிறது. அதனால் தந்தையை காண சென்னைக்கு வருகிறார். பின் தன் தாய் மல்லிகா இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் ஒரு கட்டத்தில் தன் தந்தை யார் என்று கண்டுபிடிக்கிறார். கார்த்திக்கும் தன் மகளை கண்டுபிடிக்கிறார். இதற்கிடையே கார்த்திக் காதம்பரி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இதைத் தொடர்ந்து தனது அம்மா மல்லிகா, உயிருடன் இருப்பதை அறிந்து, அவரையும் கண்டுப்பிடித்து விடுகிறாள் சக்தி. காதம்பரி கதாபாத்திரத்தில் நடிகை ஷமிதா ஸ்ரீகுமார் நடித்து வந்தார். லாக்டவுனுக்குப் பிறகு அவர் மாற்றப்பட்டிருக்கிறார்.
‘நீ போட்ட கணக்கு எல்லாமே தப்பு’: பலிக்குமா மாயாவின் திட்டம்?
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், காதம்பரிக்கு ஜூஸ் கொண்டு சென்று கொடுக்கிறாள் சக்தி. ”போ வெளிய... போ” எனக் கத்துகிறாள் காதம்பரி. ஹாலில் எல்லாரும் அமர்ந்திருக்க, “காதம்பரிய ஏதாவது பண்ணலாம்ன்னு பிளான் பண்ணிருக்கீங்களா?” என அவள் அம்மா கோபமாகக் கேட்கிறார். அதற்கு அம்மாவையும் “போ வெளிய போ” என துரத்துகிறாள் காதம்பரி. “இவள என்ன சொக்குப்பொடி போட்டான்னு தெரில” என்கிறார் காதம்பரியின் தாய். அதற்கு, “இவள ஏதாவது சொன்னன்னா, கொன்னுடுவேன்” என அம்மாவை மிரட்டி விட்டு சக்தியை அழைத்துக் கொண்டு செல்கிறாள் காதம்பரி. அப்போது “சக்தியின் வடிவில் ஸ்ருதியை காணும் காதம்பரி” என குரல் ஒலிக்கிறது. “நீங்க தூங்குறீங்களா?” என சக்தி கேட்க, “நீ பாடுனா நான் தூங்குறேன்” என்கிறாள் காதம்பரி. அவள் கோரிக்கையை ஏற்று பாடுகிறாள் சக்தி.
என்னாகி விட்டது காதம்பரிக்கு? இன்று இரவு 7.30 மணிக்கு பார்ப்போம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”