Tamil Serial News : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வந்த ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்டது. பின்னர் தமிழக அரசு, உரிய கட்டுப்பாடுகளுடன் சீரியல் படபிடிப்பை நடத்திக் கொள்ள அனுமதியளித்தது. இதனால் தற்போது அந்த சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முதல் பாகத்தில் நடித்த செந்தில் ஹீரோவாகவும், ’சரவணன் மீனாட்சி’யில் நடித்து புகழ் பெற்ற ரச்சிதா ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்கள்.
வில்லி இவ்ளோ அழகா இருந்தா யாருக்குத் தான் பிடிக்காது?!
சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து புகழ் பெற்றார். அதேபோல் ரச்சிதாவும் சரவணன் மீனாட்சி சீரியல் சீசன்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கலந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. செந்தில் மாயனாகவும், ரச்சிதா மகாவாகவும் இதில் நடித்து வருகிறார்கள்.
சின்ன வயதிலிருந்தே மாமா மகள் மகா மீது மிகவும் பிரியமாக இருக்கிறான் மாயன். வளர்ந்து பெரியவனானதும் மகா தான் உலகம் என வாழ்கிறான். ஆனால் மகாவுக்கு அப்படியான ஐடியா எதுவுமில்லை. இதற்கிடையே மகாவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். இதனால் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகிறான் மாயன். இந்நிலையில் மகாவுக்கு பேசி முடித்த மாப்பிள்ளைக்கு பண தேவை ஏற்படுகிறது, உடனடியாக மாயனிடம் உதவி கேட்கிறான்.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ”எனக்கொரு 15 லட்சம் தேவைப்படுது மாயன் உன்னால ஹெல்ப் பண்ண முடியுமா” என்கிறான். ”15 லட்சத்த நான் உனக்கு தர்றேன்” என மாயன் சொல்ல, “ரொம்ப தேங்க்ஸ் மாயன்” என்கிறான். “ஆனா அதுக்கு பதிலா மகாவ எனக்கு விட்டுத் தரணும். 15 நாள் அவ கூட பழகுன உனக்கே, அவள விட்டு தர மனசில்லயே, 25 வருஷமா அவ தான் என் வாழ்க்கைன்னு வாழ்ந்துட்டு இருக்க, எனக்கு எப்படி இருக்கும்? டீல் ஓகே-வா?” என மீசையை முறுக்கி விட்டு, வில்லத்தனமாக பேசுகிறான்.
பேரழகி மாளவிகா சுந்தர்… சூப்பர் சிங்கர் டூ வெள்ளித்திரை பறந்தார்.!
நிச்சயம் இது மகா வீட்டில் புகைச்சலை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”