Tamil Serial News: தமிழகத்தில் கொரோனா பிரச்சனை தொடங்கியதும், சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் சினிமாவின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மட்டும் அனுமதிப்பட்டிருந்த நிலையில், கட்டுப்பாடுகளுடன் 60 பேர் கலந்துக் கொள்ளும் வகையில் சீரியல் ஷூட்டிங் நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதியளித்தது.
தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு: சூரரைப் போற்று வெளியாவதில் சிக்கல்
அதே நேரத்தில் பெரும்பாலான சீரியல் நடிகர்கள் கேரளா மற்றும் பெங்களூரில் வசிப்பதால், சென்னை வந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதனால் முன்னணி சேனல்கள் தங்களது தொடர்களை நிறுத்தினார்கள். பலர் சீரியலை விட்டு விலகவும் செய்தார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ரக்ஷா ஹொல்லா, ரேஷ்மி ஜெயராஜ் இருவரும் சீரியலில் இருந்து தூக்கப்பட்டார்கள்.
தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புதிய கதை களத்துடன், புதுப்பொலிவுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதிலும் செந்திலே முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து புகழ் பெற்ற ரச்சிதா மகாலட்சுமி இடம் பெற்றிருக்கிறார். சரவணன் மீனாட்சி சீரியல் முடிந்ததும், ஜீ தமிழ் சேனலுக்கு தாவிய, அவர் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் மூலம் மீண்டும் விஜய் டிவி திரும்பியிருக்கிறார்.
கொரோனாவை வீழ்த்தி வீடு திரும்பிய மனைவி – ‘கபாலி’ கம்பேக் கொடுத்த ரஜினி ரசிகர்
தற்போது இந்த சீரியலின் சின்ன வீடியோ க்ளிம்ஸை விஜய் டிவி ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதில், ரச்சிதாவின் அப்பாவிடம் புலம்பிக் கொண்டு இருக்கிறார் செந்தில். அப்போது வரும் ரச்சிதாவிடம் ’என் கதைய கொஞ்சம் கேளேன்’ என்கிறார். ‘உன் கதையா? அது ரொம்ப போரு’ என்கிறார் ரச்சிதா. ‘உங்க அப்பாவ திட்டுவ அதானே... 20 வருஷமா இதே கதையத்தான சொல்லிட்டுருக்க’ என்கிறார். ’யோவ் மாமா கொஞ்சம் கூட மனசே இல்லாத பொண்ண பெத்து வச்சிருக்க’ என ரச்சிதா அப்பாவை செல்லமாக சீண்டுகிறார் செந்தில். இப்படி மோதலில் தொடங்குவதில் எல்லாம் காதலில் தானே முடியும்...
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”