Tamil Serial News : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வந்த ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்டது. பின்னர் தமிழக அரசு, உரிய கட்டுப்பாடுகளுடன் சீரியல் படபிடிப்பை நடத்திக் கொள்ள அனுமதியளித்தது. இதனால் தற்போது அந்த சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முதல் பாகத்தில் நடித்த செந்தில் ஹீரோவாகவும், ’சரவணன் மீனாட்சி’யில் நடித்து புகழ் பெற்ற ரச்சிதா ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் ஆண்களை ஏன் கடுமையாக தாக்குகிறது? – புதிய ஆய்வு
சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து புகழ் பெற்றார். அதேபோல் ரச்சிதாவும் சரவணன் மீனாட்சி சீரியல் சீசன்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கலந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. செந்தில் மாயனாகவும், ரச்சிதா மகாவாகவும் இதில் நடித்து வருகிறார்கள்.
அந்த எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைக்கும் நோக்கில் வித விதமான ப்ரோமோவை வெளியிட்டு வருகின்றனர் சேனல் தரப்பினர். அந்த வகையில் இன்று வெளியான ப்ரோமோவில், சாமியார் வேடமிட்டிருக்கும் மாயன் உச்சி வெளியில் கால் கடுக்க நடந்து வருகிறான். வண்டியில் மகாவும் அவளது குடும்பத்தினரும் வருகிறார்கள். ‘நான் மட்டும் நடந்து வர்றேன். நீங்க எல்லாரும் ஜாலியா வண்டில வருவீங்களோ’ என்கிறான் மாயன். இதைப் பார்த்த மகா சிரித்துக் கொண்டே ஜூஸ் குடிக்கிறாள். ’இப்போ ஆரஞ்சு ஜூஸ் குடிச்சா நால்லாருக்கும் இல்ல’ என மாயன் கேட்க, ‘சாமிக்கு எச்சில் பண்ணது எல்லாம் குடுக்கக் கூடாது’ என்கிறாள் மகா.
’ஜனவரி 2021-ல் நாங்கள் மூன்று பேர்’ அனுஷ்கா-விராட் சொன்ன குட் நியூஸ்!
ஒருவழியாக கோயில் சென்றடைகிறார்கள். கோயிலில் வைத்து மாயனின் காலை தன் மடி மீது வைத்துப் பார்க்கிறாள் மகா. அடிக்கால் முழுவதும் புண்ணாகியிருக்கிறது. இதைப் பார்த்து, “ஒண்ணு சொல்லவா? உன்ன கல்யாணம் பண்ணிக்கிறவ ரொம்ப குடுத்து வச்சவ” என்கிறாள். மகிழ்ச்சியில் உரைகிறான் மாயன். பின்னணியில் ‘அய்யய்யோ என் உசுருக்குள்ள தீய வச்சான் அய்யய்யோ’ எனப் பாடல் ஒலிக்கிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”