Vijay TV Pandian Stores: சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது... இது தல பாடும் பாட்டு... இங்கே முல்லை காதில் சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது என்று பாடுவதற்கு ஏற்ப, விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கு சிவப்பு ஜிமிக்கி வாங்கித் தருகிறான் கதிர். முல்லைக்கு பிறந்தநாள். ஆசை ஆசையா ஜிமிக்கிகள் பல கலரில் வாங்கி வைத்து இருக்கிறான் கதிர். ஆனால், என்ன பண்றது? கடையில் மறந்து வச்சுட்டு வந்துட்டான். அதை எடுத்து கடையில் வேலை செய்யும் பயல் ஒளிச்சு வேற வச்சுட்டான். வீட்டுக்கு வந்து கதிரும், முல்லையும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் ரொம்ப ஆசையா பார்த்துகிட்டு உட்கார்ந்து இருக்காங்க. அப்போதுதான் முல்லை கேட்கிறாள், ஏங்க... எனக்கு பிறந்த நாள். எனக்கு எதுவும் வாங்கித் தரணும்னு தோணலையான்னு!
பதறிப் போயிட்டான் கதிர். இந்த பதட்டத்தை முல்லைக்கிட்டே எப்படி காண்பிக்க முடியும்.. ? ஒரு நிமிஷம் இரு வந்துடறேன்னு அவசரமா கடைக்கு கிளம்பறான். வச்சது வச்ச இடத்துலே இருக்காதேன்னு புலம்பிய கதிர் அப்படி எங்கே வச்சேன்னு தெரியலையேன்னு தேடறான். கடையில் வேலை பார்க்கும் பொடியன், ஒளிச்சு வச்சு இருந்த கிஃப்ட் பாக்ஸை எடுத்து, அண்ணே இதையா தேடறியன்னு பாக்ஸை கதிர் முன்னாடி நீட்டறான். குடுடா இதை எதுக்கு எடுத்து வச்சேன்னு வாங்கிகிட்டு, அவசரமா வர்றான். முல்லைக்கு சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னு பெட்டில் வச்சுட்டு, தூங்கற மாதிரி பாவ்லா பண்ணிட்டு படுத்துட்டான்.
காலி மைதானத்தில் ஐபிஎல் போட்டியா? லாக்டவுன் 4.0 உத்தரவு என்ன சொல்கிறது?
முல்லை வந்து கட்டிலில் இருக்கும் பாக்ஸை எடுத்து பிரிச்சு பார்க்கிறாள்.. அத்தனையும் கலர்கலரான ஜிமிக்கிகள். ஆசையா புருஷனைப் பார்க்கிறாள். அவன் ஒற்றைக் கண்ணால் இவளை பார்க்கிறான். சிவப்பு ஜிமிக்கியை போட்டுக்கிட்டு, கண்ணாடியில் இப்படியும், அப்படியும் பார்த்து சிரிச்சுக்கறா. சிவப்பு லோலாக்கு குலுங்குது அவள் காதுகளில். இருவர் மனதிலும் இனம் புரியாத உணர்வு பொங்கி பொங்கி வழியுது...!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”