Vijay TV, Pandian Stores: என்னங்க... உங்ககிட்டே கொஞ்சம் பேசலாமான்னு முல்லை கேட்க, என்ன பேசப்போறே என்று தூணில் சாய்ஞ்சு நிக்கறான் கதிர். எப்படிங்க... எவ்ளோ பிரச்சனைன்னாலும் ரொம்ப கூலா யோசிச்சு தீர்வு சொல்றீக? உங்களுக்குள்ள ஒரு பெரிய மேதை ஒளிஞ்சுக்கிட்டு இருக்காங்க என்று முல்லை சொல்ல, பெருந்தன்மை பாவனை செய்து, சரி இருக்கட்டும் என்று முடிவாக பேசுகிறான். உங்களை பார்த்தா ஒரு சாதாரண டெலிவரி பாய் மாதிரி தான் இருப்பிய என்று முல்லை சொல்ல, என்னடா.. இன்னும் பாயிண்டுக்கு வரலைன்னு பார்த்தேன். இந்தா வந்துட்டே இல்லேன்னு கதிர் பேச, முல்லை இதை காதில் போட்டுக்கொள்வதாக இல்லை. எந்த பிரச்னையை சொன்னாலும், ஆர்ப்பாட்டம் செய்யாமல், அதுக்கு கூலா ஒரு தீர்வு சொல்லிடுவிய..
வில்லியாக மிரட்டியவர்: பூஜா லோகேஷை ஞாபகம் இருக்கா?
இவுக மேல சாஞ்சு ஒரு பிரச்னையை சொன்னா தேர்வு கிடைச்சுரும்னு நம்பிக்கையைத் தர்றீங்க... எப்படிங்க உங்களால முடியுதுன்னு கேட்கிறாள் முல்லை. சரி கடைக்கு போயிட்டு வரேன்னு கிளம்பிட்டான் கதிர். வீட்டில் மீனாவின் வயிற்றில் மூன்று மாச சிசு வளர்கிறது. அவளுக்கு ப்ளீட் ஆகுதுன்னு எல்லாரும் கவலையில் இருக்காங்க. வீட்டில் யாரும் சாப்பிடலை... சோகத்தில் இருக்கும்போது, படுக்கையறைக்கு வரும் கதிர், எனக்கு ஒன்னு தோணுது.. நீ எப்படி நினைச்சுப்பேன்னு தெரியலை.. சொல்லலாமா வேணாமான்னு கூட தெரியலை என்று ஆரம்பிக்கிறான். உடனே கீழே இறங்கி வந்து உட்கார்ந்துக் கொண்ட முல்லை சொல்லுங்க சொல்லுங்க என்கிறாள். ஏன் அங்கேயே உட்கார்ந்தா உனக்கு கேட்காதா என்று கதிர் கேட்க, நல்லா கேட்கட்டும்னு தான் இங்கே வந்து உட்கார்ந்து இருக்கேன்.. என்ன சொல்ல வந்தீய.. அதை சொல்லுங்க என்று சொல்கிறாள் முல்லை.
நம்ம குடும்பத்துக்கு ஒரு குழந்தை உண்டாகி இருக்குது தான்.. இதுதான் முதல் பேர குழந்தை... எல்லாருமே இதுக்காக காத்துக்கிட்டு இருக்கோம்னு பாரத்தை ஜீவா தலையிலே போட்ட எப்படி? ஜீவா அண்ணனுக்கு இன்னும் பொறுப்பு கூடிப் போயிடாதா? சகஜமா நாம் பாட்டுக்கு இருந்தாலே குழந்தை நல்லாத்தான் பொறக்க போவுது. அதை விட்டுட்டு எல்லாரும் கற்பனையில் மிதந்தா... இப்போ பாரு... நம்மளால முடியாதோ.. குழந்தைக்கு என்னாகுமோ என்று அவங்க ரெண்டு பெரும் பயப்பட, எல்லாருக்கும் பயம் பதட்டம் என்று கதிர் சொல்ல, ஏங்க எப்படிங்க இப்படி எல்லாம் யோசிக்கறிய என்று வியந்து போகிறாள் முல்லை. பிறகு ஏங்க... உங்ககிட்டே ஒன்னு கேட்கலாமா என்று கேட்கிறாள்.
செல்லப் பிராணிகளுடன் குவாரண்டைனை கழிக்கும் நடிகைகள் – படத்தொகுப்பு
வீட்டில் யார்கிட்டே பேச ஆரம்பித்தாலும், பர்மிஷன் கேட்டுட்டுத் தான் பேசுவியா என்று பதிலுக்கு கேட்கிறான் கதிர். இல்லியே.. ஏன் கேட்கறிய என்று முல்லை கேட்க.. பின்னே என்கிட்டே பேச மட்டும் கேட்கவா, கேட்கவான்னு பர்மிஷன் கேட்கிறியே என்று சொல்கிறான் கதிர். உங்களுக்கு குழந்தைன்னா பிடிக்குமா என்று கேட்கிறாள். கேட்கும்போதே அவள் முகத்தில் ஒரு பரவசம். பிடிக்குமே என்று கதிர் சொல்ல... அப்படியா? நீங்க குழந்தைங்களோட விளையாடி நான் பார்க்கவே இல்லியே என்று பதிலுக்கு சொல்கிறாள் முல்லை. இங்கே எந்தக் குழந்தை இருக்கு விளையாட என்று அவனும் கேட்கிறான். ஆமா இல்லே என்று தன்னை நொந்துக்கொண்டவள்.. அப்போ உங்களுக்கு குழந்தைன்னா ரொம்ப பிடிக்கும் இல்லே என்று தனக்குத்தான் பேசிக்கொண்டே இருக்க. இவ ஒருத்தி சொன்னதையே சொல்லகிக்கிட்டு இருக்கான்னு பயபுள்ள படுத்துகிட்டான்...
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”