Vijay TV Serial: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது. கூட்டுக் குடும்பத்தின் அவசியம் மற்றும் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இத்தொடரில் ஸ்டாலின், சுஜிதா, சித்ரா, குமரன், வெங்கட், ஹேமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
குன்னக்குடியில் மூர்த்தியும், அவரது தம்பிகளும் கடை நடத்தி வருகின்றனர். ஜீவா மீனாவையும், கதிர் முல்லையையும் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். இந்த இளம் ஜோடிகளுக்கு இடையேயான காதல் காட்சிகளுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. கதைப்படி ஊரடங்குக்கு முன்னர் மீனா கர்ப்பமாக இருந்தார். பிடிக்காமல் திருமணம் செய்துக் கொண்ட, கதிரும், முல்லையும் முன்பு எலியும் பூனையுமாக இருந்தனர். திருமணத்துக்கு பின்னர் இவர்களின் ரொமான்ஸ் காட்சிக்காகவே பலர் இந்த சீரியலை பார்த்து வருகின்றனர்.
Advertisment
Advertisements
தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சீரியல்கள் புதிய எபிசோட்களுடன் ஒளிபரப்பாகவிருக்கின்றன. அதன்படி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலும் வரும் திங்கள் முதல் ஃப்ரெஷ்ஷான எபிசோட்களுடன் ஒளிபரப்பாகவிருக்கிறது. அந்த ப்ரோமோவில் கதிர் - முல்லை சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில், முல்லை மாஸ்க் அணிந்தபடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கிறார். ரசம் வைத்துக் கொடுத்து, அவருக்கு தேவையான உதவிகளை செய்து அருகில் இருந்து கவனித்துக் கொள்கிறார் கதிர். அதில் இருவருக்குமான காதல் நிறைந்த ரொமான்ஸ் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.