இந்தியாவில் இது தான் பெஸ்ட்: சென்னையில் உற்பத்தியாகும் ஆப்பிள் ஐஃபோன் 11

ஐஃபோன் மாடல்களைக் கூட்டும் இந்திய தொழிற்சாலையை விரிவாக்க, 1 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய ஃபாக்ஸ்கான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Apple iPhone 11 chennai
ஆப்பிள் ஐஃபோன்

ஐஃபோன் 7, ஐஃபோன் எக்ஸ்.ஆர், ஐஃபோன் எஸ்.இ மற்றும் ஐஃபோன் 6 எஸ் ஆகியவற்றிற்குப் பிறகு, ஆப்பிள் அதன் சமீபத்திய தயாரிப்பான ஐஃபோன் 11-ஐ உள்நாட்டில் தயாரிக்கத் தொடங்குகிறது. முன்னதாக இந்திய தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இது குறித்து வெள்ளிக்கிழமை ட்வீட் செய்திருந்தார்.

சீட் பெல்ட் அணியாமல் அபராதம் கட்டிய ரஜினி? சமூக வலைதளங்களில் விவாதம்

ஐஃபோன் 11, ஃபாக்ஸ்கானின் சென்னை ஆலையில் தயாரிக்கப்படவிருக்கிறது. இந்தியாவில் ஒரு சிறந்த ஆப்பிள் ஐஃபோன் மாடலை உற்பத்தி செய்வது இதுவே முதல் முறையாகும். ஐஃபோன் 11 உள்ளூர் தயாரிப்பு, அதன் உலகளாவிய இறக்குமதியில் செலுத்த வேண்டிய 20 சதவீத வரியைத் தவிர்க்க உதவும்.

ஐஃபோன் 11 உள்ளூர் உற்பத்தி குறித்து, ரயில்வே மற்றும் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல், “இந்தியாவில் தயாரிக்கப்படுவதில் மிகுந்த ஊக்கமளிக்கிறது! ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐஃபோன் 11, 63,900-ஐ உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது, இது நாட்டில் முதல் முறையாக ஒரு சிறந்த மாடலைக் கொண்டுவருகிறது” என்று தெரிவித்திருந்தார்.

“2020 – ஐஃபோன் 11, 2019 – ஐஃபோன் 7 & எக்ஸ்.ஆர், 2018 – ஐஃபோன் 6 எஸ், 2017 – ஐஃபோன் எஸ்இ, நரேந்திர மோடி ஆட்சியில் இந்த காலவரிசை. இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கியுள்ளது. இது ஆரம்பம் மட்டுமே” என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார்.

ஐஃபோன் 11 உள்ளூர் உற்பத்தி, இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன் எக்ஸ்.ஆருக்கான அசெம்ப்ளி லைனை தொடங்கி கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு தொடங்கப்படுகிறது.  பெங்களூருவில் உள்ள விஸ்ட்ரானில் ஐபோன் எஸ்.இ-யை, மே 2017-ல் முதன் முதலாக ஆப்பிள் நிறுவனம் உற்பத்தி செய்தது. இது பின்னர் ஃபாக்ஸ்கானின் வசதிகளுக்கு விரிவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபரில், ஆப்பிள் இந்தியாவில் ஐபோன் எக்ஸ்.ஆரை உள்நாட்டில் தயாரிக்கத் தொடங்கியது.

ஆப்பிள் அதன் ஐஃபோன் மாடல்களுக்கான சப்ளையர்களாக ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ஐஃபோன் மாடல்களைக் கூட்டும் இந்திய தொழிற்சாலையை விரிவாக்க, 1 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய ஃபாக்ஸ்கான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஃபாக்ஸ்கானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய ஐஃபோன் அசெம்பிளராக இருக்கும் பெகாட்ரான்,  எதிர்காலத்தில் இந்தியாவில் ஒரு உள்ளூர் துணை நிறுவனத்தை அமைக்க சில முதலீடுகளை செய்யும், என மற்றொரு அறிக்கை தெரிவிக்கிறது. 

இந்தியாவில் தற்போது 50 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன் பயனர்கள் உள்ளனர். இது நாட்டின் மிக முக்கியமான சந்தைகளில் ஒன்றாகும். பல்வேறு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களான ஷியோமி, சாம்சங், விவோ போன்றவை அதிகரித்து வரும், நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்தியாவில் நிறைய முதலீடு செய்துள்ளன.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Apple iphone 11 manufacture at foxconn chennai plant

Next Story
‘அமேசான் பிரைம் டே’ ஆஃபர் வந்தாச்சு… வரிசைகட்டும் புது மாடல் ஸ்மார்ட்போன்கள்Amazon, Indiia, amazon prime day sale, amazon prime day sale 2020, amazon prime day sale, prime day sale, prime day sale amazon, amazon prime day sale 2020 date, amazon prime day sale date 2020, amazon prime day sale start date, prime day sale time, prime day start date, amazon prime day sale 2020 offers, amazon prime day sale 2020 offers, amazon prime day sale 2020 india offers, amazon prime day 2020 india
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com