Tamil Serial News: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் எப்போதுமே அந்தச் சேனலின் டாப் லிஸ்டில் இருக்கும் ஒன்று. மூர்த்தி – தனம், ஜீவா – மீனா, கதிர் – முல்லை என மூன்று ஜோடிகள். இவர்களுக்குள் இருக்கும் பரஸ்பர அன்பு பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.
அண்ணன் மூர்த்தி, தனது தம்பிகள் தான் உலகம் என்று வாழ்பவர். அவரது மனைவி தனமோ கொழுந்தனார்களை குழந்தையாக பாவிக்கும் மனம் கொண்டவர். இதனால் இவர்கள் இருவருமே தங்களுக்கென குழந்தை கூட பெற்றுக் கொள்ளவில்லை. ஜீவாவுக்கு தனது மாமா மகள் முல்லையுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் ஜீவாவோ முதலாளி பெண் மீனாவை காதலிக்கிறான். இதனால் அவனது தம்பி கதிரை, திருமணம் செய்துக் கொள்கிறாள் முல்லை.
???? லவ் பண்னா இப்படி தான் இருக்கும் போல ???? நமக்கு எங்க ????
ஆரம்பத்தில் கதிருக்கும் முல்லைக்கும் ஒத்து வராவிட்டாலும், போகப்போக இருவருக்குள்ளும் புரிதல் ஏற்படுகிறது. தற்போதைய நிலவரத்தின் படி, இவர்களின் ரொமான்ஸுக்காகவே பலர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலைப் பார்த்து வருகிறார்கள்.
தற்போது இந்த சீரியலில் இருந்து மினி வீடியோ ஒன்றை விஜய் தொலைக்காட்சி ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. அதில், “மாவு அரைக்க, ரைஸ் மில்லுக்காக பக்கத்து ஊருக்கு முல்லையை கூட்டி வந்திருக்கிறான் கதிர். இங்க வேற எந்த ரைஸ் மில்லும் இல்லையாங்க? என்கிறாள். திருச்சி போவோமா? என்கிறான் கதிர். மாவு அரைக்க அவ்ளோ தூரம் எதுக்கு? என்கிறாள் முல்லை. ‘குன்னக்குடியே சின்ன ஊரு. நீ கேட்டன்னு தான் பக்கத்து ஊருக்கு கூட்டிட்டு வந்துருக்கேன்’ என்கிறான் கதிர். அதற்கு, என்னது பக்கத்து ஊரா என்கிறாள் முல்லை. அதுவே உனக்குத் தெரியாதா? என கதிர் கேட்க, ‘நீங்க பக்கத்துல இருக்கும் போது எனக்கு எதுவுமே தெரில’ என முல்லை சொல்ல, பூரித்துப் போகிறான் கதிர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”