Tamil Serial News: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் கொரோனா பொது முடக்க காலத்தில், ஒரு மணி நேரமாக நீட்டிக்கப்பட்டது. அண்ணன் தம்பிகளையும், கூட்டுக் குடும்பத்தையும் மையப்படுத்திய இந்த சீரியலில் வில்லத்தனங்கள் அளவாக இருப்பதால், ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.
டி.ஆர்.பி மோசடி: செய்தி சேனல்களுக்கான ரேட்டிங் நிறுத்தம்
மூர்த்தியின் மூத்த தம்பி ஜீவாவுக்கு தனது மாமா மகள் முல்லையுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் ஜீவாவோ முதலாளி பெண் மீனாவை காதலிக்கிறான். இதனால் அவனது தம்பி கதிரை, திருமணம் செய்துக் கொள்கிறாள் முல்லை. முதலில் இருவருக்கும் பிடிக்காமல் இருந்தாலும், போகப் போக புரிதல் உண்டாகிறது.
தற்போது ஜீவாவின் மனைவி மீனாவுக்கு பெண் குழந்தை பிறந்து, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி, அம்மா வீட்டில் இருக்கிறாள். கொரோனா வைரஸ் பரவி வரும் காரணத்தால் குழந்தையை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. குழந்தையையும், மனைவியையும் பார்க்க மருத்துவமனைக்கு போன ஜீவாவிற்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. வீட்டிலும் நர்ஸ் கவனிப்பில் தான் மீனாவும், குழந்தையும் இருக்கிறார்கள்.
ஜீவாவின் அம்மாவிற்கு பேத்தியை பார்க்க ஆசையாக இருந்ததால், மீனாவின் வீட்டிற்கு செல்கிறார். தொற்று நோயை காரணம் காட்டி குழந்தையை பார்க்க விடாமல் தடுக்கிறார் நர்ஸ். இதனால் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகிறார்கள். வீட்டிற்கு வந்த பின் வீடியோ கால் செய்து குழந்தையை காட்டுகிறாள் மீனா. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கு ஏகபோக மகிழ்ச்சி. ஆனால் மீனாவின் அப்பாவோ, மகளையும் பேத்தியையும் ஜீவா வீட்டுக்கு அனுப்பி விடக் கூடாது என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார்.
சபாஷ் சரியான போட்டி… பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா!
மீனாவிற்கு நல்ல படியாக குழந்தை பிறந்ததால், பொங்கல் வைத்து சாமி கும்பிடுவதாக, வைத்த வேண்டுதலை நிறைவேற்ற கோயிலுக்கு செல்கிறார்கள் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர். குடும்பத்தினர் விருப்பத்தின்படி மீனாவும், குழந்தையும் வீட்டுக்கு வருவார்களா? அல்லது அப்பாவின் சூழ்ச்சி வலையில் மாட்டிக் கொள்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”