/tamil-ie/media/media_files/uploads/2020/03/Pandian-Stores-Mullai-Kathir.jpg)
Pandian Stores, Mullai Kathir
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை, கதிர் சூப்பரா ரொமான்ஸ் பண்றாங்க. ரசிகர்களும் இந்த ரொமான்ஸ் காட்சிகளை ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என்று ஹாட் ஸ்டாரில் பார்த்து பார்த்து ரசித்து வருகின்றனர். சண்டை இல்லாமல், வில்லி இல்லாமல் ஒரு சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்தான். இப்படி மென்மையா எபிசோட்ஸ் ஒளிபரப்பாகி வந்தது.
கொரொனோ வைரஸ் மார்ச் 11: இந்தியாவில் 52 பேர் பாதிப்பு, உலகளவில் முன்னேற்பாடுகள் தீவிரம்
திடீர்னு மீனா அப்பா அம்மா வந்து குடும்பத்தில் கும்மி அடிக்க ஆரம்பிச்சு இருக்காங்க. மீனாவும் கொஞ்சம் அப்படி இப்படி என்று பேச ஆரம்பித்து இருக்கிறாள். ரசிகர்களுக்கு இப்போதே இதயம் உடைந்துவிட்டது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பார்க்கும்போது எந்தவித டென்ஷனும் இல்லாமல் ஜாலியா என்ஜாய் பண்ணி குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கலாம்.
அதிலும் அண்ணிகள் மூவரும் கடைக்குட்டி கண்ணனிடம் இழுக்கும் வம்பு, அதற்கு அவன் சொல்லும் பதில் என்று குடும்பத்தின் கொண்டாட்டம் அதில் இருக்கும். நான் வீட்டோட மாப்பிள்ளையா போயிட்டேன்னா என்ன பண்ணுவீங்க அண்ணி என்று கண்ணன் கேட்க, உனக்கு கல்யாணமே கிடையாதுடா போடான்னு அண்ணி தனம் சொல்றா... என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிப்புட்டாங்க என்று கண்ணன் அதிர்ச்சியாவது என்று இந்த வம்பு ஒரு சுகம்.
தை பூசம்.. எல்லாரும் 10 நாள் விரதம் இருக்கணும்னு அத்தை சொல்லிட்டாங்க என்று முல்லை சொல்றா. கதிர் அன்னிக்கு பார்த்துத்தான் அல்வா மல்லிப் பூ வாங்கிட்டு வந்து இருக்கான். இருக்கவே இருக்கான் கண்ணன்.. அவன்கிட்டே நைசா குடுத்துட்டான் கதிர். ஒரு கடலை மிட்டாய் கூட வாங்கித் தர மாட்டியே இன்னிக்கு என்ன புதுசான்னு கேட்டு கிட்டே அல்வா சாப்பிடறான் கண்ணன்.
வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள்: ஓடி வந்து தோள் கொடுக்கும் சென்னை பி.சி.வி.சி
இப்படி இருவரின் ரொமான்ஸில் மட்டும் முல்லை கதிர் காதல் போயிகிட்டு இருக்கு. திடீர்னு ஒரு நாள் இரவு ஏங்க நிலா தர்பூசணி மாதிரி இருக்குன்னு முல்லை சொல்ல, என்னது தர்பூசணியா என்று அவனும் நிலாவைப் பார்க்க முல்லை அருகில் போக, அவள் தோளோடு தோள் உரசி தீக்குச்சி உரசல் மாதிரி ஆகிப்போச்சு... இப்போ பார்த்தா தை பூசம் வரணும்னு சொல்றான் கதிர். ஏங்க.. அது எப்போதும் இப்போத்தாங்க வரும் என்று முல்லை சொல்ல... ஏக்கப் பெருமூச்சு இருவருக்குள்ளும். ஆனால், கடைசி வரைக்கும் நிலா எப்படி தர்பூசணி மாதிரி தெரியும்னு சொல்லவே இல்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.