/tamil-ie/media/media_files/uploads/2020/08/Pandian-Stores-Vijay-TV-TV-serial-news-tamil-tamil-serial-news.jpg)
pandian stores mullai instagram vijay tv
Tamil Serial News: கூட்டுக் குடும்பத்தை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ள 'பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 4 அண்ணன் தம்பிகளை மையப்படுத்தியது.
”அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி உடனே கிடைக்காது” – ஏன் இவ்வாறு கூறுகிறார் மருத்துவர் ககன்தீப்?
மூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் என நான்கு அண்ணன் தம்பிகள். முதல் ஜோடியான மூர்த்தி - தனம் குடும்பத்தின் மீது காட்டும் அக்கறை பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. மூத்த தம்பி ஜீவாவுக்கு தனது மாமா மகள் முல்லையுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் ஜீவாவோ முதலாளி பெண் மீனாவை காதலிக்கிறான். இதனால் அவனது தம்பி கதிரை, திருமணம் செய்துக் கொள்கிறாள் முல்லை. ஜீவாவை திருமணம் செய்துக் கொண்ட மீனா, தற்போது கர்ப்பமாக இருக்கிறாள். கதிருக்கும் முல்லைக்கும் முதலில் பிடிக்காமல் இருந்தாலும், போகப் போக புரிதல் உண்டாகிறது. தற்போது ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ள சீரியல் ஜோடிகளாக இவர்கள் மாறியிருக்கிறார்கள்.
முல்லை மட்டுமல்ல, அவள் குடும்பத்தின் மீதும் மிகுந்த அன்பும், அக்கறையும் காட்டத் தொடங்கியிருக்கிறான் கதிர். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், முல்லையும், அவள் அம்மாவும் காவல் நிலையத்தில் இருக்கிறார்கள். ‘உன் புருஷன் எங்கம்மா’ எனக் கேட்கிறார் ஒரு பெண் போலீஸ். அப்போது கதிர் அங்கு வருகிறான். ‘வட்டிக்கு காசு வாங்கிட்டு திருப்பிக் கேட்டா, அடிப்பியா’ என போலீஸார் அடித்து, கதிரை லாக்கப்பில் போடுகிறார்கள். விஷயத்தைக் கேள்விப்பட்டு, மூர்த்தியும், ஜீவாவும் காவல் நிலையத்திற்கு வருகிறார்கள். கதிரை வெளியில் விடும்படி காவல்துறை அதிகாரியிடம் கோரிக்கை வைக்கிறார் மூர்த்தி. ’எதுவா இருந்தாலும் கோர்ட்ல பேசிக்கோங்க’ என்கிறார் அந்த காவலர்.
காங்கிரஸில் ‘காந்தி’ குடும்பத்திற்கு எதிரான புயல்கள்
ப்ரோமோவின் பின்னணியில் ‘எள்ளு வய பூக்கலயே’ பாடல் ஓடிக் கொண்டிருக்கிறது. விடாமல் அழுதுக் கொண்டிருக்கிறாள் முல்லை. என்ன நடந்தது என்பதை இன்று இரவு 8 மணிக்கு தெரிந்துக் கொள்ளலாம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.