’இருக்குறத வச்சு சமைக்குறவங்க தான் நல்ல சமையல்காரங்க’: மூர்த்தி அண்ட் பிரதர்ஸ்

வீட்டிலுள்ள பெண்களுக்கு விடுமுறை அளித்து விட்டு, சமையலறையை ஆக்கிரமித்திருக்கிறார்கள் மூர்த்தியும் அவரது தம்பிகளும்.

வீட்டிலுள்ள பெண்களுக்கு விடுமுறை அளித்து விட்டு, சமையலறையை ஆக்கிரமித்திருக்கிறார்கள் மூர்த்தியும் அவரது தம்பிகளும்.

author-image
WebDesk
New Update
Tamil TV News, Vijay TV Pandian Stores

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

Pandian Stores Serial: அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையப்படுத்தி விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், ஸ்டாலின், சுஜிதா, சித்ரா, குமரன், வெங்கட், ஹேமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisment

மெழுகுச் சிலை ஷிவானி, கிளாஸி வித்யா: முழு புகைப்படத் தொகுப்பு

குன்னக்குடியை மையமாக வைத்து இயக்கப்படும், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’  சீரியலில் மூர்த்தியும், அவரது தம்பிகளும் அங்கு கடை நடத்தி வருகின்றனர். முதல் தம்பி ஜீவா மீனாவையும், இரண்டாவது தம்பி கதிர், முல்லையையும் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். இந்த இளம் ஜோடிகளுக்கு இடையேயான காதல் காட்சிகளுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. கொரோனா ஊரடங்கு காரணமாக 3 மாதமாக சீரியல் படபிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் தற்போது மீண்டும் சீரியல் படபிடிப்புகள் கட்டுப்பாடுகளுடன் நடந்து வருகின்றன.

Advertisment
Advertisements

இதற்கிடையே விஜய் டிவி ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து சிறிய வீடியோவை வெளியிட்டுள்ளது. வீட்டிலுள்ள பெண்களுக்கு விடுமுறை அளித்து விட்டு, சமையலறையை ஆக்கிரமித்திருக்கிறார்கள் மூர்த்தியும் அவரது தம்பிகளும். கசகசா எங்க இருக்கு’ என மூர்த்தி கேட்க, ’அது இல்ல மாமா, இருக்குறத வச்சு சமையல் பண்றவங்க தான், நல்ல சமையல்காரங்கன்னு நீங்க தான சொன்னீங்க’ என கலாய்க்கிறார் தனம்.

ஆடிப்பெருக்கு : கோயில்களில் அனுமதி இல்லை…வீட்டில் இருந்தபடியே இப்படி வழிபட்டால் பலன் கிடைக்கும்!

ஆம்லெட் போட ஜீவா வெங்காயம் உரிக்க சொல்ல, ஆம்லெட் போடுறியாண்ணே என முட்டைகளை மாற்றி மாற்றி மேலே போட்டு விளையாடுகிறான் கடைக்குட்டி கண்ணன். இதுக்கு முன்னாடி சமைக்கும் போது நாம சமையல்கட்டை நாஸ்தி பண்ணிட்டோம்ன்னு செம கம்ப்ளைண்ட். இந்த முறை அந்த மாதிரி இல்லாம பாத்துக்கணும் என, ஜீவா, மூர்த்தி, கதிர் மூவரும் சீரியஸாக பேசிக் கொண்டிருக்க, கையில் வைத்திருந்த முட்டையை தவறி கீழே போட்டு விடுகிறான் கண்ணன். மற்ற மூவரும் செம காண்டாகிறார்கள்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Vijay Tv Tv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: