Tamil Serial News: சினிமாவுக்கு அடுத்தபடியாக சின்னத்திரை தொடர்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தினமும் புதுப்புது ட்விஸ்டுகளுடன் இதன் ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை இன்னும் தூண்டும். இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக பல சீரியல்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. நடிகர், நடிகைகள், ஒளிபரப்பு நேரம், ஒளிபரப்பப்படும் உள்ளிட்டவைகளில் மாற்றம் செய்யப்பட்டது.
சென்னைக்கு இன்று வயது 381: சில முக்கிய இடங்கள் இங்கே!
அந்த வகையில் சில சீரியல்கள் 30 நிமிடத்திலிருந்து 1 மணி நேரம் வரை நீட்டிக்கப்பட்டது. அப்படி விஜய் டிவி-யில் தினமும் இரவு 9.30 மணிக்கு ‘செந்தூரப்பூவே’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் மூலம் முதன் முறையாக, சினிமாவிலிருந்து, சின்னத்திரைக்குள் நுழைந்திருக்கிறார் ரஞ்சித். நடுத்தர வயது (45) கொண்ட துரைசிங்கத்தைப் பற்றிய கதை. மனைவியை இழந்த இவர் மரியாதைமிக்க குடும்பத்தின் மூத்த மகன். இவருக்கு கயல்விழி மற்றும் கனிமொழி என இரண்டு அழகான மகள்கள் உள்ளனர். அவரது மனைவி அருணா இறந்த பிறகு, மறு திருமணம் பற்றி துரைசிங்கம் யோசிக்கவில்லை.
அவரது அம்மாவும், தங்கையும் ஜோசியரை பார்க்க சென்றபோது, ‘உங்க செல்ல பேத்தி கயல்விழியோட ஜாதக படி, உங்க மகனுக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சிக்கற யோகம் இருக்கு. அதோட, அந்த பொண்ண, கயலே கூட செலக்ட் பண்ணலாம் ‘ என்கிறார். அதே நேரத்தில் பாடம் சொல்லிக் கொடுக்க வீட்டுக்கு வரும் ஆசிரியை ரோஜாவிடம், பிள்ளைகள் அன்பாக இருப்பதைப் பார்த்து மொத்தக் குடும்பமும் சந்தோஷப் படுகிறது. இதையெல்லாம் மனதில் வைத்து, ‘பேசாம அண்ணனுக்கு ரோஜாவையே கல்யாணம் பண்ணி வச்சிடலாம்’ என்ற எண்ணத்தில் துரை சிங்கத்தின் அம்மாவும், தங்கையும் இருக்கிறார்கள்.
பிறந்தநாள் விழாவில், ‘எனக்கு அம்மா வேணும்ப்பா’ என தனது ஆசையை அப்பாவிடம் சொல்கிறாள் கயல். திகைத்து நின்ற துரை சிங்கம், மகளின் ஆசைக்கு இணங்க தான் திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறுகிறான். ஆனால் மறுபுறம் ரோஜாவோ, அன்புவை காதலித்து மணந்துக் கொண்டாள். அடுத்தத் திருப்பம் என்னவாக இருக்கும் என்பதில், தீவிரமாக இருக்கிறார்கள் ரசிகர்கள்.
இந்நிலையில், அத்தை பாகம்பிரியாளிடம் கேம் விளையாட ஃபோன் கேட்கிறாள் கயல். ’எத்தன தடவ சொல்லிருக்கேன் மொபைல்ல கேம் விளையாடக்கூடாதுன்னு?’ என்கிறார் அத்தை. ’அத்தத்த ப்ளீஸ் அத்த கொஞ்ச நேரம் அத்த’ என கயல் கெஞ்ச, ‘இப்படி கொஞ்ச நேரம்ன்னு சொல்லி சொல்லியே ரொம்ப நேரம் விளையாடுவ. அதுக்கப்புறம் காலைல கண்ணு எரியுது அத்தன்னு வந்து நிப்ப. ஒண்ணும் வேண்டாம் போ’ என கயலிடம் கண்டிப்பு காட்டுகிறார் அத்தை. ’என் செல்ல அத்தல்ல, ப்ளீஸ் அத்த. கொஞ்ச நேரம் யூஸ் பண்ணிட்டு கொடுத்துடுறேன். கொஞ்ச நேரம் கொடுங்க அத்த’ என்கிறாள் கயல். அதற்கு ‘ம்ஹூம் மாட்டேன்’ என அத்தை கூற, ’உம்மா...’ என முத்தமிட்டு, ’என்னோட ஸ்வீட் அத்த இப்ப எனக்கு ஃபோன் தருவாங்களாம்’ என ஐஸ் வைக்கிறாள் கயல்.
‘நீ ஒண்ணும் எனக்கு பாஸ் இல்ல’ ஆதாரம் கேட்டவரை அலற விட்ட வனிதா
’இப்படியே முத்தம் கொடுத்து, முத்தம் கொடுத்தே உன் காரியத்த சாதிச்சுக்க. சரியான வாலு... இந்தா’ என ஃபோனைக் கொடுக்கிறார். ‘தேங்க்ஸ் அத்த’ என்றவாறு கேம் விளையாடும் கயல், ‘நீங்க டென்ஷன் ஆகாம பூ கட்டுங்க’ என்கிறாள். ‘நல்லா பெரிய மனுஷி மாதிரி பேசுடி’ என புன்னகைக்கிறார் பாகம்பிரியாள் அத்தை.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”