Advertisment
Presenting Partner
Desktop GIF

இந்த அம்மா ’அழகன்’ படத்தை ஞாபகப்படுத்துறாங்களே!

எல்லாருக்கும் போல கயலுக்கும் நான் கிளாஸ் டீச்சர் தான். அம்மா எல்லாம் ஒன்னும் இல்லை என்று சொல்றாங்க.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Serial News, Vijay TV Senthoorapoove

Tamil Serial News, Vijay TV Senthoorapoove

Vijay TV, Senthoorapoove : விஜய் டிவியில் கடந்த திங்கள் முதல் செந்தூரப்பூவே என்கிற புத்தம் புது சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 90-களில் வெளியானது அழகன் திரைப்படம். இதில் நடிகர் மம்முட்டி, நடிகை பானுப்பிரியா நடித்து இருந்தார்கள். மம்முட்டி ஆதரவற்ற குழந்தைகளை எடுத்து வளர்ப்பார். அவர்கள் அம்மா எங்கே என்று கேட்டால் காண்பிக்க ஒரு பெண் முதுகை காண்பிப்பது போல ஒரு போட்டோவை காண்பித்து இவர்தான் உங்க அம்மா.. சாமிகிட்ட போயிட்டாங்க என்று சொல்வார்கள். அதே போல விஜய் டிவியின் செம்பருத்தி சீரியலில் முதுகை காண்பித்தபடி இருக்கும் போட்டோவை காண்பித்து, இவங்கதான் உங்க அம்மா.. சாமிகிட்ட போயிட்டாங்க என்று இரண்டு சிறுமிகளிடம் வீட்டினர் சொல்லி வைக்கிறார்கள். ஆனால், சிறுமி கயலுக்கு அம்மா ஏக்கம் அதிகமாக இருக்கிறது.

Advertisment

டிரடிஷனல் ஹன்சிகா, வைப்ரண்ட் இந்துஜா: முழு புகைப்படத் தொகுப்பு

இந்த நேரத்தில் பள்ளியில் புது கிளாஸ் டீச்சராக வரும் ரோஜா, அந்த போட்டோவில் இருந்த மாதிரியே முதுகை காண்பித்து, அதே புடவையில் கோயில் மணியை அடித்தபடி கயலுக்கு காட்சி தருகிறார். அதோடு, பள்ளி விளையாட்டு போட்டிகளில் அம்மாவுக்கு பதில் கயலுடன் கிளாஸ் டீச்சர் விளையாடறாங்க. இதனால் ரோஜா தான் தனது அம்மா என்று கனவில் மிதக்கிறாள் கயல். மாலை வீட்டுக்கு டியூஷன் எடுக்க ரோஜா டீச்சர் வரப்போறாங்கன்னு கிளாசில் சொல்லும் கயல், ரோஜா டீச்சர்தான் எங்க அம்மா என்று பேசிக்கொண்டு இருக்கிறாள். என்ன அங்கே பேச்சு என்று ரோஜா டீச்சர் கேட்க, மிஸ்.. நீங்க தான் கயலோட அம்மாவாம். அதனால தான் அவ வீட்டுக்கு நீங்க டியூஷன் எடுக்க போறீங்களாம். கயல் சொல்றா மிஸ்னு ஒரு சிறுமி சொல்லிவிட, ரோஜா டீச்சருக்கு கோவம் வந்துருது.

’என் கல்யாணம் எனக்கே இப்போ தான் தெரியுது’ : ஹன்சிகா

எல்லாருக்கும் போல கயலுக்கும் நான் கிளாஸ் டீச்சர் தான். அம்மா எல்லாம் ஒன்னும் இல்லை என்று சொல்றாங்க. இது போதாதா சிறுமி தேம்பித் தேம்பி அழ... எதுக்கு அழறே என்று டீச்சர் கேட்கறாங்க. நீங்க தான் என் அம்மா இல்லேன்னு சொன்னீங்க.. நான் வேற அம்மா பார்த்துக்கறேன், என்று அழுதுக்கொண்டே வீம்பாக சொன்னாலும் மீண்டும், ஏன் டீச்சர் நிஜமாவே நீங்க என் அம்மா இல்லையா என்று கேட்கிறாள். ரோஜாவுக்கு அழும் சிறுமியைப் பார்க்க ரொம்ப பாவமாக இருக்கிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Vijay Tv Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment