Tamil Serial News: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ இப்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.
முந்தானை முடிச்சு ரீமேக்: ஊர்வசியாக ஐஸ்வர்யா ராஜேஷ்!
கொரோனாவுக்குப் பிறகு, இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை 1 மணி நேரம் விஜய் டிவி-யில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணம்மாவுடன் பாரதிக்கு திருமணமானாலும், அவன் மீது அஞ்சலி, வெண்பா என இரண்டு பெண்கள் ஆசைப்படுகின்றனர். கண்ணம்மாவிடமிருந்து பாரதியைப் பிரித்து, அந்த இடத்திற்கு தாங்கள் வர வேண்டும் என்பதே அவர்கள் ஒவ்வொருவரின் எண்ணம். கண்ணம்மா அப்பாவின் இளையதாரத்தின் மகள் அஞ்சலி. அவளை பாரதியின் தம்பி அகிலனுக்கு பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால் அவளுக்கோ, பாரதியைப் பிடித்து விடுகிறது. இருப்பினும் அவனை அடைவதற்காக, அகிலனை திருமணம் செய்துக் கொள்கிறாள்.
அக்கா என்றபோதிலும், கண்ணம்மாவுக்கு நிறைய தொல்லைகளைக் கொடுத்து வருகிறாள். போதாக்குறைக்கு, பாரதியுடன் மருத்துவ கல்லூரியில் படித்த வெண்பாவுக்கும், அவன் மீது காதல். இன்னொரு பெண்ணும் அவன் மீது ஆசைப்பட, அவளை கொல்வதற்காக விபத்து ஏற்படுத்துகிறாள் வெண்பா. அதில் பாரதிக்கும் அடிபட்டு விடுகிறது. தனக்காக அவன் காத்திருக்க வேண்டும் என்பதற்காக, இனி உனக்கு குழந்தை பிறக்காது, என பொய் சொல்லி விடுகிறாள் வெண்பா. இதற்கிடையே கண்ணம்மா கர்ப்பமாகிறாள். சந்தோஷப் படும் பாரதியை தனது வில்லத்தனங்களால் குழம்ப விடுகிறாள்.
அது தனது குழந்தை தான் என்பதில் உறுதியாக இருந்த பாரதியை, தொடர்ச்சியான வில்லத்தனங்களால் அவன் மனநிலையை மாற்றுகிறாள் வெண்பா. அதன் பின் கண்ணம்மாவின் நடத்தையை சந்தேகித்து, அவள் வயிற்றில் வளர்வது தனது குழந்தை இல்லை எனும் முடிவுக்கு வந்து விடுகிறான் பாரதி. ஆனால் இதை வெளியில் சொல்ல முடியாமல், கண்ணம்மாவுடன் பேசுவதை தவிர்த்து விடுகிறான். கண்ணம்மாவுக்கும், குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது எனத் தெரியாமல் குழம்பிப் போகிறார்கள்.
இதற்கு முடிவு கட்டும் நோக்கத்தில், மொத்த குடும்பமும் ஒன்று கூடி என்ன நடந்தது, என பாரதியை துருவி துருவி கேட்கிறார்கள். ’அது என்னன்னு சொன்னா, இந்த குடும்பத்தோட நிம்மதி கெட்டுப் போய்டும்’ என பாரதி சொல்ல, அதை தெரிந்துக் கொள்வதில் குடும்பத்தினர் தீவிரம் காட்டுகிறார்கள். கடுகடுத்த முகத்துடன், ‘கண்ணம்மா சுமக்குறது என்னோட குழந்தை இல்ல, அது வேற ஒருத்தனோடது, இவள் ஒழுக்கங்கெட்டவ’ என்கிறான்.
இதைக் கேட்ட பாரதியின் அம்மா செளந்தர்யா, ’என் மருமகளையா தப்பா பேசுற, அவ நெருப்புடா, அவள் என்னோட பாதி. சூரியன் மேற்குல உதிக்கும்னு சொன்னா கூட நான் நம்புவேன்! ஆனா அவ நடத்தை கெட்டவன்னு சொல்றத என்னால நம்பவே முடியாது. அவள பத்தி இப்படி பேச உனக்கு எப்புடி மனசு வந்ததுன்னு’, கோபத்தின் உச்சத்துக்கு செல்கிறார். நீ என் மகனே இல்ல, நீ தகுதிய இழந்துட்ட, நீ கண்ணமாகிட்ட மன்னிப்பு கேளு’ என சொல்கிறார்.
அதோடு பாரதியின் அப்பா, தம்பி அகிலன், தங்கை அறிவு என அனைவரும் கண்ணம்மாவுக்கு ஆதரவாக நிற்க, ‘அவ ஒழுக்கங்கெட்டவ அதுக்கு என்கிட்ட ஆதாரம் இருக்கு’ என சொல்கிறான் பாரதி. இதைப் பார்க்கும் வெண்பாவுக்கும், அஞ்சலிக்கும் உள்ளுக்குள் ஒரே குதூகலம் ஏற்படுகிறது.
விவாகரத்தான விஜய், விக்ரம் ஹீரோயின்: உறுதிப்படுத்திய கணவர்…
தனது அறியாமையையும், வெண்பாவின் சூழ்ச்சியையும் பாரதி எப்போது தெரிந்துக் கொள்வான்? பொருந்திருந்து பார்ப்போம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”