Tamil Serial News: கோவிட் 19 தொற்று, லாக்டவுன் ஆரம்பித்த வேகத்தில் விஜய் டிவியில் மகாபாரதம் தொடரை மறு ஒளிபரப்பு செய்து வருகிறது. மகாபாரதம் சில வருடங்களுக்கு முன்னர் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகியது.வெகு ஜன மக்கள் பார்த்து ரசித்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாபாரதம் சீரியலைத்தான். அந்த வகையில் விஜய் டிவி வெற்றி கண்டது. இப்போது மறு ஒளிபரப்பில் மகாபாரதம் தொடரை தினமும் ஒளிபரப்பி வருகிறது. இப்போதும் மக்கள் அதே ஆர்வத்துடன் மகாபாரதம் சீரியலை பார்த்து வருகிறார்கள். அடுத்து, மிக விரைவில் ராமாயணம் சீரியலையும் ஒளிபரப்ப இருக்கிறது விஜய் டிவி.
குழந்தைகள், குடும்பங்கள் கொண்டாடும் ரம்ஜான் பண்டிகை – சிறப்பு புகைப்படங்கள்
ஒரு மகனின் இணையில்லா பாசம். ஒரு மனைவியின் அளவில்லா அன்பு. ஒரு சேவகனின் அபரீதமான பக்தி என்று இவைகள் நிறைந்தது தான் ராமாயணம். ராமானந்த சாகர் இயற்றிய ராமாயணத்தை விஜய் டிவி மிக விரைவில் ஒளிபரப்ப இருக்கிறது. இறுக்கத்தில் மன உளைச்சலில் இருக்கும் மனதை வேறு வழியில் திசை திருப்புங்கள் என்று ராமாயணத்தைப் படிக்க சொல்கிறார்கள். அந்த வகையில் படிக்க நேரம் இல்லாதவர்கள் மன அமைதியுடன் ராமாயணத்தை சின்னத்திரையில் பார்க்கும்படி வசதி செய்துள்ளது விஜய் டிவி.
‘வம்சம்’ பூமிகாவா இது? நிஜத்துல படு ஸ்டைலிஷா இருக்காங்களே…
பார்க்க பார்க்க சலிக்காத சீதா, ராமனின் காதல் வாழக்கை. வனவாசம் செல்லும்போது எனக்கு எதற்கு இந்த சுகபோக வழக்கை என்று சீதா அரண்மனை வாசத்தை தவிர்த்து காடு, மலை, வெயில், மழை என்று கணவனுடன் செல்ல தயாராக இருக்க. நீங்கள் மட்டும் தான் பதி பக்திக்காக வனவாசம் செல்வீர்களா? நானும் சகோதர பாசத்துக்காக என்ன செய்கிறேன் பாருங்கள் என்று லட்சுமணன் உடன் கிளம்புவது. பரதன் அண்ணனின் செருப்பை தலையில் வைத்து, பீடத்தில் வைத்து ஆட்சி செய்வது. எல்லாவற்றையும் விட அனுமனின் சொல்ல முடியாத பக்தி. இதை காதல் காவியம் என்று சொல்வதா? சகோதர வாழ்வியல் சொல்லும் கதை என்று சொல்வதா? பக்தி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று உணர்த்தும் பக்தி காவியம் என்று சொல்வதா? இவை எல்லாம் மனதை நெகிழ வைக்கும் சம்பவங்கள் என்று ராமாயணம் சீரியல் முழுக்க நிறைந்து கிடக்கிறது. இதன் ஒட்டுமொத்த கதையும் ராமாயணம் வடிவில் காணக் கிடைக்கும்போது மக்கள் அதைத் தவற விடுவார்களா என்ன? இதனால்தான் தொலைக்காட்சிகள் இப்படியான இதிகாச தொடர்களை மக்களின் மனம் அறிந்து அவ்வப்போது மறு ஒளிபரப்பு செய்து வருகின்றன.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”