New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/03/Sembaruthi-Serial-Aadhi-Parvathi.jpg)
Sembaruthi Serial, Aadhi Parvathi
இரவு 9 மணி ஸ்லாட் என்பது தொலைக்காட்சிகள் இடையே பிரைமரி டைம் ஸ்லாட் என்கிற இடத்தை பெற்றது.
Sembaruthi Serial, Aadhi Parvathi
Zee Tamil, Sembaruthi Serial: ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி சீரியலின் ஷூட்டிங் தொடங்கி விட்டது. இன்னும் சில நாட்களில் மீண்டும் இரவு 9 மணிக்கு செம்பருத்தி சீரியல் ஒளிபரப்பாகத் துவங்கிவிடும். இந்த நிலையில், தொலைக்காட்சிகளில் இப்போதே போட்டி நிலவத் துவங்கி இருக்கிறது. ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியல் பெரும்பாலான மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளது. செம்பருத்தி சீரியல் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்ப துவக்கியதற்குப் பிறகு தான் இரவு 9 மணி ஸ்லாட் என்பது தொலைக்காட்சிகள் இடையே பிரைமரி டைம் ஸ்லாட் என்கிற இடத்தை பெற்றது.
’மாம்பழ கேக்’ ஆண்ட்ரியா, ’ஏலக்காய் டீ’ நித்யா மேனன் – புகைப்படத் தொகுப்பு
சன் டிவி இதனால் தான் புது சீரியல்களை ஒளிபரப்பத் துவங்கினால், அதை முதலில் 9 மணிக்கு ஒளிபரப்ப ஆரம்பித்து ஓரளவு மக்கள் விரும்பிப் பார்க்கும் நிலை வந்ததும், அந்த ஸ்லாட்டின் விலைக்குத் தகுந்தாற்போல நேரத்தை மாற்றி சீரியலை ஒளிபரப்பத் துவங்கும். அந்த வரிசையில் முதலில் ராசாத்தி சீரியல், அடுத்து இப்போது சித்தி 2 சீரியல் என்று ஒளிபரப்பி வந்தது. லாக்கடவுனுக்குப் பிறகும் சன் டிவி சித்தி 2 சீரியலைத்தான் ஒளிபரப்ப உள்ளது. சித்தி 2 சீரியல் ஆரம்ப காலம் தொட்டே அவ்வளவு சுவாரஸ்யத்தை தருவதாகவும், மக்கள் விரும்பும் சீரியலாகவும் இல்லை.
மம்மூட்டி, மோகன்லால், விஜய், அஜித்: முன்னணி நடிகர்களின் ’பாடிகார்ட்’ திடீர் மறைவு
இந்த நிலையில், மீண்டும் தொலைக்காட்சிகள் தங்களது நிகழ்ச்சிகள், சீரியலை ஒளிபரப்பத் துவங்க உள்ள நிலையில், ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலுக்கான வரவேற்பு முன்பு இருந்ததைப் போலவே நல்ல வரவேற்புடன் இருக்கும். அதில் பார்வதியாக நடிக்கும் நடிகை ஷபானா ஆண்களுக்குப் பிடித்த ஹீரோயின். அதோடு இவரை பெண்களுக்கும் வெகுவாக பிடித்து இருக்கிறது. நாயகன் ஆதியாக நடித்து வரும் கார்த்திக் ராஜ், பெண்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோ என்கிற அந்தஸ்தை பிடித்து இருக்கார். சென்னையை தவிர்த்து மற்ற எல்லா ஊர்களிலும் கார்த்திக் ராஜ், இளம் பெண்கள் மத்தியில் படு ஃபேமஸ். சென்னை தவிர மற்ற அனைத்து ஊர்களிலும் சீரியல்களை விரும்பிப் பார்க்கும் மக்களின் பெரும்பாலான விருப்பம் ஜீ டிவியின் செம்பருத்தி சிரியல் தான். இந்த நிலையில், லாக்கடவுனுக்குப் பிறகு தொலைக்காட்சிகள் இயல்பு நிலைக்குத் திரும்பி சீரியல்களை ஒளிபரப்பினால், செம்பருத்தி சீரியல் ரேட்டிங்கில் முதலிடத்தை மீண்டும் தக்க வைத்துக்கொள்ளும் என்பது கணிப்பு.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamill இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.